இயேசு இறந்தவர்களுக்கு உயிர்கொடுத்தாரே? முஹம்மது அப்படிப்பட்ட அற்புதத்தைச் செய்யவில்லையே? இவர்களில் யார் மகத்தானவர்?


 

பொருளடக்கம்

 

இயேசு செய்த எல்லா அற்புதங்களும் அல்லாஹ்விடமிருந்து அவருக்கு வழங்கப்பட்ட ஆற்றலால்தான் நடந்தன. இயேசுவை முஸ்லிம்கள் பல அற்புதங்களைச் செய்த மகத்தான இறைத்தூதர்களில் ஒருவராக விசுவாசம் கொண்டுள்ளார்கள். அவர் குருடர்களையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார் என்றும், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்பினார் என்றும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். ஆனால் இவை அனைத்தையும் அவர் இறைவனின் அனுமதியுடன் மட்டுமே செய்தார் என்கிறோம்.

 

குர்ஆனின் அத்தியாயம் அல்மாயிதாவில் அல்லாஹ் கூறுகிறான்: பின்பு அல்லாஹ் (ஈசாவை நோக்கிக்) கூறுவான்: ‘மர்யமுடைய குமாரன் ஈசாவே! உம் மீதும், உம்முடைய தாய் மீதும் (நான் புரிந்துள்ள) என்னுடைய அருளை நீர் நினைத்துப் பாரும். பரிசுத்த ஆவியின் மூலம் உமக்கு நான் உதவி புரிந்தபோது, (உம்முடைய தூதுத்துவ தகுதியைப் பற்றியும், உம் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியும்) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும் (நினைத்துப் பாரும்.) எழுத்தறிவையும், நுட்பமான விளக்கங்களையும், ‘தவ்றாத்’தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பாரும்.) மேலும், நீர் என் கட்டளைப்படி ஒரு பறவையின் உருவத்தைப் போன்று களிமண்ணில் செய்து, அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையின் மூலம் (உயிர் பெற்ற உண்மைப்) பறவையாக மாறியதையும், பிறவிக்குருடனையும் தொழுநோயாளியையும் என் உதவியினால் நீர் குணப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்.) இறந்தவர்களை என்னுடைய அனுமதியின் பேரில் (உயிர்ப்பித்து, அவர்களின் கல்லறைகளிலிருந்தே அவர்களை) நீர் வெளியேற்றியதையும் (நினைத்துப் பாரும்.) மேலும், இஸ்ரவேலர்களிடம் தெளிவான ஆதாரங்களை நீர் கொண்டு வந்தபோது, அவர்களில் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள், ‘நிச்சயமாக இது ஒரு தெளிவான சூனியமே தவிர வேறில்லை” என்று கூறிய(துடன், உம்மைச் சிலுவையில் அறைந்து கொல்லத் துணிந்த) சமயத்தில் நான் உம்மைவிட்டு அவர்(களின் அந்தச் சூழ்ச்சி)களைத் தடுத்துவிட்டதையும் நினைத்துப் பாரும்.(5:110)

 

இறைவன் வழங்கிய ஆற்றலால்தான் இயேசு அற்புதங்களைச் செய்ய முடிந்தது என்பதை பைபிளும் கூறுகிறது..

பைபிளில் இயேசு தமது அற்புதங்களைக் குறித்துக் கூறும்போது அவற்றைத் தாம் சுயமாகச் செய்யவில்லை என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இயேசுவே அந்த அற்புதங்களைச் செய்ததாகக் கூறப்படும் அனைத்துக்கும் அவை முரணாக அமைந்துள்ளன. தமக்கு இந்த அற்புதங்களைச் செய்ய இறைவன்தான் ஆற்றல் அளிப்பதாகவும் கூறுகிறார்.

 

யோவான் அதிகாரம் 14, வசனம் 28இல் கூறுகிறார்:என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

 

யோவான் அதிகாரம் 10, வசனம் 29இல் கூறுகிறார்:அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்

 

மத்தேயு அதிகாரம் 12, வசனம் 28இல் கூறுகிறார்:நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்..

 

லூக்கா அதிகாரம் 11, வசனம் 20இல் கூறுகிறார்:நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்

 

யோவான் அதிகாரம் 5, வசனம் 30இல் கூறுகிறார்:நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியேநியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பினபிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்புநீதியாயிருக்கிறது.

 

யோவான் அதிகாரம் 10, வசனங்கள் 25 முதல் 39 வரை உள்ள செய்தியின் மூலம் இயேசு ஒரு மனிதரைத் தவிர வேறில்லை என்றும், அவரை இறைவன் ஒரு தூதராகவே அனுப்பியுள்ளான் என்றும் அறிய முடிகிறது. இறைவன் கூறுவதைச் செவியுறுவதும், அவன் கற்பிக்கும்படிச் சொன்னதைக் கற்பிப்பதும், அவர் செய்கிற ஒவ்வோர் அற்புதமும் இறைவனுடையது என்றும் அறிகிறோம்.‘இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன்’ என்று கூறினார்.

 

யோவான் 17:1-3: இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளினயாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும்நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மைமகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

 

பைபிளின் இந்த எல்லா வசனங்களும் ஒரு விஷயத்தைத் தெளிவாக அறிவிக்கின்றன. அதாவது, இயேசு செய்த எல்லா அற்புதங்களும் அகிலங்களின் இறைவனின் அனுமதியோடும் அவன் வழங்கிய ஆற்றலைக்கொண்டுமே செய்ய முடிந்தன. இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதாக இருந்தாலும், குருடர், குஷ்டரோகிகளைக் குணப்படுத்துவதாக இருந்தாலும் அனைத்துமே இறைவனின் சித்தப்படியே நடந்தன.

 

இதுபோன்ற ஒரு செய்தி நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்தும் சூரா நஜ்மில் அத்தியாயம் 53 வசனங்கள் 3,4இல் வந்துள்ளது:

அவர் தமது மனஇச்சைப்படி எதனையும் கூறுவதில்லை.இது அவருக்கு ‘வஹ்யி’ மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர வேறு இல்லை.

 

அனைத்து எபிரேய தீர்க்கதரிசிகளும் இப்படியான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்

இயேசு செய்ததாகக் கூறப்படும் எல்லா அற்புதங்களையுமே அவருக்கு முந்திய எபிரேய தீர்க்கதரிசிகள் செய்துள்ளதை பைபிளில் காணலாம்:

இறந்தவரை எலிசா உயிர்ப்பித்துள்ளார்- 2 இராஜாக்கள்4:36, 1 இராஜாக்கள்17:23

 

தொழுநோயாளியை எலிசா குணப்படுத்தியுள்ளார்- 2 இராஜாக்கள்5:14

 

யோசேப்பு குருடரைக் குணப்படுத்தியுள்ளார்- ஆதியாகமம்46:4

 

இப்படியான உதாரணங்கள் பல உண்டு. இப்படிப்பட்ட அற்புதங்களை அவர்கள் இயேசுவுக்கு முன்பே, (அப்போது இயேசு பிறந்திருக்கவும் இல்லை) அதுவும் பல காலத்திற்கு முன்பே செய்துள்ளனர் என்பதற்காக இயேசுவை விட மகத்தானவர்கள் என்று சொல்ல முடியுமா?

 

மகத்துவத்தை முடிவு செய்ய அற்புதங்கள் அளவுகோல் அல்ல

மொழி அகராதிப்படி ‘அற்புதம்’ என்பதின் பொருள்: அசாதாரணமான நிகழ்வு அல்லது இறைவனின் அதி ஆற்றலால் நடக்கும் ஒரு நிகழ்வை மனித மூளையினால் விவரிக்க முடியாமல் இருத்தல்.

 

நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முந்திய எல்லா இறைத்தூதர்களின் அற்புதங்களும் காலத்தால், இடத்தால் கட்டுப்பட்டது. அதாவது, அந்த அற்புதங்களை மறுபடியும் யாரும் நடைமுறையில் பார்க்க முடியாது. ஒரு தடவை அது நடந்துவிட்டால் பிறகு மறுமுறை அது நிகழ்வதில்லை, நிகழ்ந்துகொண்டே இருப்பதில்லை.

 

பைபிளின் கூற்றுப்படி மத்தேயு அதிகாரம் 24 வசனம் 24இன்படி இயேசு கூறுகிறார்: ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரியஅடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

 

இதன்படி பார்க்கும்போது அற்புதங்களை அளவுகோலாகக் கொண்டு மகத்துவத்தை முடிவுசெய்ய முடியாது என்று அறிகிறோம்.

 

இயேசுவைப் பொறுத்தவரை தன்னைவிட மகத்தானவராக யோவான் ஸ்நானனைக் கூறுகிறார்.

 

மத்தேயு அதிகாரம் 11 வசனம் 11இல் இயேசு கூறுகிறார்: ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை. ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்.

 

ஆனால் இந்த யோவான் ஸ்நானன் ஒரே ஓர் அற்புதத்தைக் கூட நிகழ்த்தியவரல்ல.என்றாலும் மகத்தானவராக இயேசுவால் புகழப்படுகிறார்.

 

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் 3000க்கும் மேற்பட்ட அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். அவற்றைக் குறித்து ஆதாரப்பூர்வமான நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

குர்ஆன்தான் உயிர்வாழும் மகத்தான அற்புதம்

நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மகத்தான அற்புதம் குர்ஆன்தான். அதற்கு நிகரான அற்புதம் எதுவுமே இல்லை.

 

1400 வருடங்களுக்கு முன்பிலிருந்து இன்று வரையும், இன்னும் மறுமை நாள் வரையிலும் குர்ஆன் அதனுடைய அற்புதமான நடையாலும், ஆழமான வார்த்தைகளாலும் அற்புதமாகவே அமைந்துள்ளது. இன்று விஞ்ஞான வளர்ச்சியுள்ள காலமாக இருப்பதால், இன்றைய உலகுக்கு விஞ்ஞானரீதியான உண்மைகளை எடுத்தியம்புவதைக் கொண்டும் குர்ஆன் தன்னை அற்புதம் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. மொத்தத்தில் ஓர் உலகளாவிய அற்புதமாக குர்ஆன் உள்ளது.

 

ஆனாலும் முஸ்லிம்கள் இந்த அளவுகோலைக்கொண்டு இயேசுவுக்கும் முஹம்மது நபியவர்களுக்கும் இடையே பாகுபாடு கற்பிப்பது கிடையாது.

 

பைபிளில் யோவான் 16:12இல் இயேசு கூறுகிறார்:இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

 

இந்த வசனத்தின்படி இயேசு தமது போதனைகளை முழுமைப்படுத்தாமலே சென்றிருக்கிறார். ஆனால் குர்ஆனின் அல்மாயிதா அத்தியாயத்தின்5:3 வசனம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது:இன்று நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் நான் திருப்தியடைந்துவிட்டேன்.

 

ஆகவே நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர வேண்டும். ஒரு குறிப்பிட்ட அற்புதத்தைக்கொண்டு ஒருவர் மகத்தானவரா என்பது முடிவாகாது. எந்த மனிதரையும், இறைத்தூதரையும் இந்த அளவுகோல்படி முடிவுசெய்ய முடியாது.

 

ஆதாரக்குறிப்புகள்

http://www.answering-christianity.com/sami_zaatri/rebuttal_to_sam_shamoun_3.htm

1287 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க