அல்லாஹ்வின் வேதங்கள் மீது நம்பிக்கை


அல்லாஹ் வானிலிருந்து தன் தூதர்களுக்கு வேதங்களை இறக்கியுள்ளான் என்று நம்பிக்கை கொள்வது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அந்த வேதங்கள் வாயிலாக மனிதர்களுக்கு தன் செய்திகளை அவன் தெரிவித்தான். அவை இறக்கப்பட்டபோது அவற்றில் உண்மை தவிர வேறு எதுவுமில்லை. அனைத்து வேதங்களும் அல்லாஹ் ஒருவனே படைப்பாளன், வாழ்வாதாரம் அளிப்பவன், உரிமையாளன், எஜமானன் என்று கூறி, அவன் ஒருவனையே வணங்கும்படியும், அவனுக்கு அழகிய பெயர்களும் பண்புகளும் உண்டெனத் தெளிவுபடுத்தின.

 

பொருளடக்கம்

 

குர்ஆன்

அல்லாஹ் கூறுகிறான்: நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதியாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். (அல்குர்ஆன்57:25)

 

வேதங்கள் பல வகை

அல்லாஹ் பல வகையான வேதங்களை இறக்கியுள்ளான். அவை:

 • இப்றாஹீம் (அலை) அவர்களின் ஏடுகள் (சுஹ்ஃபுகள்)
 • தவ்றாத்
 • ஸபூர்
 • இன்ஜீல்
 • குர்ஆன்

 

1. இப்றாஹீம் நபி (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்ட ஏடுகள்

அல்லாஹ் கூறுகிறான்: இப்றாஹீம் மற்றும் மூசாவுக்கு சுஹ்ஃபுகள் எனும் ஏடுகள் இறக்கப்பட்டன.  (அல்குர்ஆன் 87:19)

 

2. தவ்றாத் என்பது தோரா ஆகும்.

தவ்றாத் என்பது மூசா நபி (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதமாகும். அல்லாஹ் கூறுகிறான்:தவ்றாத்எனும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கின்றது; ஒளியும் இருக்கின்றது. அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (பாதிரிகளாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், இவர்கள்) அதற்குச் சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அப்படியிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டார்கள். முஸ்லிம்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக்கொள்ளுங்கள். என் வசனங்களைச் சொற்ப விலைக்குப் பகரமாக விற்றுவிடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே ஆவர். (அல்குர்ஆன்5:44)

 

3. ஸபூர் என்பதை பைபிளில் சங்கீதம் என்று கூறப்படுகிறது.  

ஸபூர் வேதத்தை அல்லாஹ் நபி தாவூது (அலை) அவர்களுக்கு இறக்கினான். அல்லாஹ் கூறுகிறான்:"தாவூதுக்கு நாம் ஸபூரைக் கொடுத்தோம்." (அல்குர்ஆன்4:163)

 

4. இன்ஜீல்

இன்ஜீல் எனும் வேதத்தை அல்லாஹ் நபி ஈசா (அலை) அவர்களுக்கு வழங்கினான். அல்லாஹ் கூறுகிறான்: (முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளின் மீதே மர்யமுடைய குமாரன் ஈசாவையும் நாம் அனுப்பி வைத்தோம். அவர் தம் முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். மேலும், அவருக்குஇன்ஜீல்என்னும் வேதத்தையும் நாம் இறக்கினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ளதவ்றாத்தை உண்மையாக்கி வைக்கின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சமுடையவர்களுக்கு அது ஒரு நேரான வழியாகவும், நல்ல அறிவுரையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன்5:46)

 

ஒரு முஸ்லிம் வானிலிருந்து இறக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் அவை அல்லாஹ்வுடையவை என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் அவற்றின் சட்டங்களை இப்போது அவர் பின்பற்றுதல் கூடாது. காரணம், அந்த வேதங்கள் அவை யாருக்கு இறக்கப்பட்டனவோ அந்தச் சமுதாயங்களுக்கு மட்டுமே உரியவை. இன்று அனைத்து சமுதாயங்களுக்கும் நேர்வழிகாட்டியாக குர்ஆன் இறக்கப்பட்டுள்ளது. இது மனிதர்கள் அனைவருக்குமான நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2.185)

 

5. மகத்தான குர்ஆன்

ஒருவர் குர்ஆனைக் குறித்து பின்வரும் நம்பிக்கைகளைக்கொள்ள வேண்டும்:

அ) ஒருவர் குர்ஆனை அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும், அவை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வழியாக நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்குத் தெளிவான அரபுமொழியில் வழங்கப்பட்டது என்றும் நம்பிக்கைகொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

(அல்லாஹ்வின் கட்டளைப்படி) ரூஹுல் அமீன் என்னும் ஜிப்ரீல் இதனை உம் உள்ளத்தில் இறக்கி வைத்தார்.மனிதர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக,தெளிவான அரபி மொழியில் இதனை இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் 26.193..195)

 

ஆ) குர்ஆன்தான் இறுதி வேதம் என்றும், அது தனக்கு முன்பு இறக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் உண்மைப்படுத்தி, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனுக்கே கீழ்ப்படிய வேண்டும் என்றும் உறுதியாகச் சொல்கிறது என நம்பிக்கைகொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் எல்லா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்ததவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். (மேலும், நன்மை தீமைகளைப்) பிரித்து அறிவிக்கக்கூடிய (மற்ற)வற்றையும் அவன் இறக்கியுள்ளான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், (தீயவர்களைத்) தண்டிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 3.3,4)

 

இ) குர்ஆன் அல்லாஹ்வின் கட்டளைகள், சட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது என்றும் ஒருவர் நம்பிக்கைகொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இன்று உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் முழுமைப்படுத்திவிட்டேன். என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கிவிட்டேன். இஸ்லாமையே என்னுடைய மார்க்கமாகவும் திருப்தியடைந்தேன். (அல்குர்ஆன் 5.3)

 

ஈ) குர்ஆன் மனித குலம் அனைத்துக்குமாக இறக்கப்பட்டது; முன்பு இறக்கப்பட்ட வேதங்களைப் போல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் குர்ஆன் இறக்கப்படவில்லை என்றும் ஒருவர் நம்பிக்கைகொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

ரமழான் மாதம் எத்தகைய மகத்துவமிக்கதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுகின்ற குர்ஆன் (என்கிற வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 2.185)  

 

உ) குர்ஆனை அல்லாஹ் எல்லாவித இடைச்செருகல்கள், திருத்தங்கள், மாற்றங்கள், மறைத்தல்கள் அனைத்தை விட்டும் பாதுகாப்பான் என்றும் ஒருவர் நம்பிக்கைகொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக நாம்தான் (இந்த) நினைவூட்டலை (உம் மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம். (அல்குர்ஆன் 15.9)

 

அல்லாஹ்வின் வேதங்களை நம்பிக்கைகொள்வதின் சிறப்புகள்

 1. அல்லாஹ் தன் அடியார்கள் மீது கொண்டுள்ள கருணை மற்றும் அன்பை ஒருவர் உணர முடிகிறது. அவர்களுக்கு அவன் வேதங்களை இறக்கி சரியான பாதைக்கு வழிகாட்டுகிறான். அது அவனது திருப்தியை நமக்குக் கொண்டு வருகிறது. ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் குழப்பத்தை விட்டும் மனிதனை அவன் பாதுகாக்கிறான்.
   
 2. ஒருவர் அல்லாஹ்வின் மகத்தான ஞானத்தைப் புரிந்துகொள்ளலாம். காரணம், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களுக்குத் தோதுவான சட்டங்களை அவர்களின் காலத்தில் வழங்கியுள்ளான்.
   
 3. உண்மையான விசுவாசிகளைப் பிரித்துக் காட்டுகிறது இந்த நம்பிக்கை. யார் இந்நம்பிக்கையை ஏற்கிறாரோ, அவர் மற்ற வேதங்களையும் நம்பிக்கைகொள்வது கடமையாக ஆகிவிடுகிறது.
   
 4. அல்லாஹ்வின் நம்பிக்கைகொண்டவர்களின் நற்செயல்கள் அதிகரிக்கிறது. யார் தனக்கு இறக்கப்பட்ட வேதங்களையும், அதற்குப் பின்பு இறக்கப்பட்ட வேதங்களையும் நம்பிக்கைகொள்கிறாரோ அவருக்கு இரண்டு மடங்கு கூலி உண்டு. அல்லாஹ் கூறுகிறான்:
  ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் நம்முடைய வேதத்தைக் கொடுத்து, அவர்களும் அதனை உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள், ‘இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இதுவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதனை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுவார்கள்.இத்தகையவர்கள் உறுதியாக இருந்ததின் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்)கூலிகொடுக்கப்படும். இத்தகையவர்கள், தீய செயல்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மமும் செய்வார்கள். (அல்குர்ஆன்28:52..54)

 

ஆதாரம்

http://www.1ststepsinislam.com/en/belief-in-books.aspx

2775 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க