அல்லாஹ்வின் தூதர்கள் மீது நம்பிக்கை


அல்லாஹ்வின் தூதர்கள் மீது நம்பிக்கைகொள்வது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இறைநம்பிக்கையின் ஆறு தூண்களில் ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய தூதர்களாக மனிதர்களில் மிகச் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் மூலம் தனது படைப்புகளுக்கு, அதாவது மனிதர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சட்டங்களை அவன் வழங்கி அவற்றின் அடிப்படையில் அவனை வணங்குமாறும், அவனுக்குக் கீழ்ப்படியுமாறும் ஏவியுள்ளான். இதன் மூலமாக அவனுடைய மார்க்கத்தையும் ஏகத்துவத்தையும் நிலைநிறுத்துகிறான். இச்செய்தியை அவனுடைய தூதர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும், தங்களுக்கு எந்த வழிகாட்டலும் வரவில்லை என்று அவர்கள் அல்லாஹ்வைக் குறைகூறக் கூடாது என்பதற்காக ஆதாரத்தையும் அவன் இப்படி நிலைநாட்டுகிறான்.

 

இறைத்தூதர்கள்தாம் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதற்கும் அவனுடைய சொர்க்கத்தைப் பெறுவதற்கும் நற்செய்தியை அறிவிப்பவர்கள். தங்களை நம்பிக்கைகொண்டு தங்களின் போதனைகளைப் பின்பற்றும் மக்களுக்கு அவர்கள் இந்த நற்செய்தியை அறிவிப்பார்கள். அதே சமயம், அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்களின் போதனைகளை நிராகரித்து அவர்களை நம்பிக்கை கொள்ள மறுத்த மக்களுக்கு அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தைக்கொண்டும் தண்டனையைக்கொண்டும் எச்சரிக்கை செய்வார்கள். 

 

பொருளடக்கம்

 

குர்ஆன்

அல்லாஹ் கூறுகிறான்: (நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே தவிர (நம்முடைய) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, (தங்களைச்) சீர்திருத்திக்கொண்டார்களோ அவர்களுக்கு எந்தப் பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். ஆனால், (உங்களில்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்)பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக்கொள்ளும். (அல்குர்ஆன்6:48-49)

 

இறைத்தூதர்கள் பலர் அனுப்பப்பட்டுள்ளனர். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய வரலாற்றையே நாம் உமக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. (அல்குர்ஆன்40:78)

 

இறைத்தூதர்கள் அனைவர் மீதும் நம்பிக்கைகொள்ள வேண்டும். அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் அபார சக்தி கொண்ட படைப்பு அல்ல. அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறு எவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம்முடைய கட்டளைகளை) அவர்களுக்கும் ‘வஹ்யி’ (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி நீர் கூறும்: ‘இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் முன்னுள்ள வேதமுடையோரிடம் கேட்டு (அறிந்து)கொள்ளுங்கள்.” இன்னும், அவர்களுக்கு நாம் உணவே உட்கொள்ளாத உடலைக் கொடுக்கவில்லை. மேலும், அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. (அல்குர்ஆன்21:7,8)

 

அல்லாஹ்வின் தன்மைகளுக்கு ஒப்பான எந்தத் தன்மைகளும் அவர்களுக்கு இல்லை. தாங்களாக எந்த நன்மையோ தீமையோ அவர்கள் செய்துகொள்ள முடியாது. பிரபஞ்ச இயக்கத்தின் மீது அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. தாங்கள் விரும்பியதையெல்லாம் நிகழ்த்திக் காட்டிவிட முடியாது. அல்லாஹ் நாடினால் மட்டுமே அவர்களால் எதையேனும் செய்ய முடியும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: நபியே நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினால் தவிர நான் எனக்கு ஏதேனும் ஒரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்குச் சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறிந்திருக்க முடியுமானால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; எந்தத் தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.” (அல்குர்ஆன் 7.188)

 

இறைத்தூதர்களில் சிலரை நம்பிக்கைகொண்டு, சிலரை ஒருவர் நிராகரிப்பார் என்றால், அவர் குஃப்ர் எனும் இறைநிராகரிப்புக் கொள்கையைக் கைக்கொண்டவர் ஆவார். அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பாகுபாடு செய்யக் கருதி, ‘(தூதர்களில்) சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” எனவும் கூறி (அல்லாஹ்வின் மீதான நம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும்) மத்தியில் ஒரு  பாதையை  ஏற்படுத்த விரும்புகின்றார்களோ,இத்தகையவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள்தாம். அல்லாஹ்வை  நிராகரிப்பவர்களுக்கு நாம் இழிவு தரக்கூடிய வேதனையையே தயார் செய்து வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 4.150,151)

 

இறைத்தூதர்களின் பெயர்கள்

குர்ஆனில் 25 இறைத்தூதர்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவை:

  1. ஆதம் (ஆதாம்)
     
  2. நூஹ் (நோவா)
     
  3. இத்ரீஸ் (ஏனோக்)
     
  4. ஹூது
     
  5. ஸாலிஹ்
     
  6. இப்றாஹீம் (ஆப்ரஹாம்)
     
  7. லூத் (லோத்து)
     
  8. இஸ்மாயீல் (இஸ்மவேல்)
     
  9. இஸ்ஹாக் (ஈசாக்)
     
  10. யஅகூப் (யாக்கோபு)
     
  11. யூசுஃப் (யோசேபு)
     
  12. ஷுஐப்
     
  13. அய்யூப்
     
  14. மூசா (மோசே)
     
  15. ஹாரூன் (ஆரோன்)
     
  16. துல்கிஃப்ல் (எசேக்கியேல்)
     
  17. தாவூது (தாவீது)
     
  18. சுலைமான் (சாலொமோன்)
     
  19. இல்யாஸ் (எலியா)
     
  20. அல்யசஉ (எலிசா)
     
  21. யூனுஸ் (யோனா)
     
  22. ஸகரிய்யா
     
  23. யஹ்யா (யோவான் ஸ்நானன்)
     
  24. ஈசா (இயேசு)
     
  25. முஹம்மது

 

உலுல் அஸ்ம் எனும் உறுதிமிக்க தூதர்கள்

அல்லாஹ் தன் தூதர்களில் சிலரை உலுல் அஸ்ம் எனப்படும் உறுதிமிக்க தூதர்களாகக் குறிப்பிட்டுள்ளான். தங்கள் தூதுச்செய்தி எடுத்துரைக்கும்போது மிகப் பெரிய உறுதிப்பாட்டுடன் சோதனைகளை எதிர்கொண்டு பொறுமையுடன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். நூஹ், இப்றாஹீம், மூசா, ஈசா மற்றும் முஹம்மது ஆகியவர்களே அந்தத் தூதர்கள். அல்லாஹ் அத்தூதர்களின் அந்தஸ்தை உயர்த்துவானாக. இக்கருத்தை குர்ஆனுடைய 33ஆம் அத்தியாயத்தின் 7ஆம் வசனம் குறிப்பிடுகிறது.

 

இறைத்தூதர்களில் முதல் தூதர் நூஹ் ஆவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் ‘வஹ்யி’ (மூலம் மார்க்கத்தை) அறிவித்தவாறே உங்களுக்கும் நிச்சயமாக நாம் அறிவித்தோம். (அல்குர்ஆன் 4.163)

 

முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இறுதித்தூதர். அவர்களுக்குப் பின் இறுதி நாள் வரை எந்த நபியும் வரமாட்டார். அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு இறுதி முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கின்றார். (அல்குர்ஆன் 33.40)

 

இறைத்தூதர் முஹம்மதின் மார்க்கம் இதற்கு முன்பிருந்த எல்லா மதச்சட்டங்களையும் காலாவதியாக்கிவிட்டது. இனி முழுமை பெற்றதும் இறுதியானதுமான ஒரே மார்க்கம் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் மட்டுமே. அதையே உலக முடிவு நாள் வரைபின்பற்றுவது கட்டாயமாகும். இனி நிலையான மார்க்கமும் அது ஒன்றே.

 

முஹம்மது (ஸல்) யார்?

அவர்களின் பெயர் முஹம்மது. அவர்களுடைய தந்தை பெயர் அப்துல்லாஹ். தாய் ஆமினா. பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிப். முப்பாட்டனார் பெயர் ஹாஷிம். நபி முஹம்மதின் சிறப்புப்பெயர் (குன்யா) அபுல் காசிம் என்பதாகும். அரபுகளில் குறைஷி எனும் கோத்திரத்தைச் சேர்ந்த அவர்கள், நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வமிசத்தில் பிறந்தார்கள். இந்த வமிசத்தை அரபுகளில் அத்னான் எனக் கூறப்படும்.

 

நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இஸ்மாயீலின் சந்ததிகளில் கினானா கோத்திரத்தை மற்ற கோத்திரங்களைக் காட்டிலும் தேர்ந்தெடுத்தான். குறைஷ் கோத்திரத்தை கினானாவின் மற்ற கோத்திரங்களைக் காட்டிலும் தேர்ந்தெடுத்தான். குறைஷிகளில் ஹாஷிமுடைய குடும்பத்தை மற்ற எந்தக் குடும்பங்களைக் காட்டிலும் தேர்ந்தெடுத்தான். ஹாஷிமின் குடும்பத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தான். (முஸ்லிம் 2276)

 

இறைத்தூதர் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து தமது முதல் இறைச்செய்தியை நாற்பதாம் வயதில் அடைந்தார்கள். அதற்குப் பின்பு 13 வருடங்கள் மக்காவிலே தங்கியிருந்து மக்களை அல்லாஹ்வின் ஏகத்துவம் பக்கம் அழைத்தார்கள். பின்னர் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கிருந்த மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். அந்த மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். அங்கு இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் வழங்கப்பட்டன. தாம் புலம்பெயர்ந்து சென்று எட்டு வருடங்கள் ஆன பின் மக்காவை வெற்றிகொண்டார்கள். அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அப்போது அவர்களுக்கு முழு குர்ஆனும் இறங்கி முழுமை பெற்றிருந்தது. இஸ்லாமியச் சட்டங்கள் அனைத்தும் விவரிக்கப்பட்டு முழுமை அடைந்திருந்தது. எல்லா அரபுகளும் இஸ்லாமைத் தழுவியிருந்தனர்.

 

இறைத்தூதர்களை நம்பிக்கைகொள்வதின் சிறப்புகள்

  1. அல்லாஹ்வின் கருணை மற்றும் அன்பை உணர முடிகிறது. அவன் தன்னுடைய மார்க்கத்தை வழங்கி தன் அடியார்களுக்குத் தூதர்களை அனுப்பியுள்ளான். அத்தூதர்கள் மனிதர்களுக்கு மிக மேலான முன்மாதிரியாக உள்ளார்கள்.
     
  2. இறைநம்பிக்கை கொள்வோரில் உண்மையாளர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதைப் பிரித்துக் காட்டுகிறது இந்த நம்பிக்கை. ஒருவர் தமக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரை நம்பிக்கைகொள்வது மட்டுமின்றி குர்ஆனில் கூறப்பட்ட வேறு தூதர்களையும் நம்பிக்கை கொள்வது கட்டாயமாகும்.
     
  3. வேதம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரை நம்பிக்கைகொள்வதுடன், முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கைகொண்டால் அவர்களுக்கு இரட்டை கூலி உண்டு.

 

ஆதாரம்

http://www.1ststepsinislam.com/en/belief-in-messengers.aspx

3906 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க