அல்லாஹ்வின் கருணை


முஸ்லிமல்லாதவர்கள் பலரின் கேள்விகளில் ஒன்று, அல்லாஹ் மிகவும் கருணையுள்ளவன் என்றால் ஏன் மனிதர்களில் நிறைய பேர் நரகத்திற்குச் செல்வார்கள் என்றிருந்தும் அவன் அவர்களைப் படைத்தான்? ஏன் அவர்கள் நரகில் எரிவதைப் பார்க்க விரும்புகிறான் அவன்?

 

இதற்குரிய பதிலை அறியும் முன்பு ஒரு விஷயம். நாம் இப்போது ஏற்கனவே படைக்கப்பட்டு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்கேள்விகளை ஆராய்வதின் மூலம் எந்த மாற்றமும் இனி நடந்துவிடப் போவதில்லை. ஆயினும் மனிதனின் இயல்பு ஒன்றைக் குறித்து ஆர்வமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பது. எனவே அல்லாஹ் ஏன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை நாம் புரிய வைக்க முயற்சி செய்வோம்.

 

பொருளடக்கம்

 

தர்க்கத்தைப் பயன்படுத்தினால் பிரபஞ்சம் நிலைக்காது

வாதம் என்னவென்றால், ஏராளமான மனிதர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்றால் அவர்களை அல்லாஹ் படைத்திருக்கக் கூடாது என்பதே.

 

இந்த வாதத்தை ஒருவர் இன்னும் நீட்டினால், ஏன் அல்லாஹ் இந்த விலங்குகள் மற்ற விலங்குகளைக் கொன்று சாப்பிடுகிறது என்று தெரிந்தும் படைக்க வேண்டும் எனவும் கேட்கலாம்.

 

உதாரணமாக, ஒரு மானை புலியோ சிங்கமோ வேட்டையாடுகிறது. எலியை பாம்புகளும் பூனைகளும் கொன்று சாப்பிடுகிறது. புழுக்களும் மீன்களும் பறவைகளால் வேட்டையாடப்படுகிறது. தாவரங்களை ஆடுகளும் மாடுகளும் உண்கின்றன.

 

உங்கள் வாதப்படி விலங்குகள், தாவரங்கள் போன்றவை கூட படைக்கப்படக் கூடாது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், ஓர் உயிருள்ள படைப்பு இன்னொரு படைப்பை அதற்கு மரண வலி தெரியுமளவு கொன்றுதான் வாழ வேண்டும் என்றால் அப்படிப்பட்ட படைப்பை அல்லாஹ் படைத்திருக்கக் கூடாது. இப்படித்தான் கருத்து வரும்.

 

இப்போது கேள்வி இப்படி எழும்: உயிர் வாழ எந்தப் படைப்புகளும் இல்லையெனில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதில் என்ன பொருள் இருக்க முடியும்?

 

அல்லாஹ் கொல்ல விரும்புவதில்லை

சிலர் நினைப்பது போல் அல்லாஹ் மனிதர்களைக் கொன்று நரகத்தில் வேதனை செய்வதில் விருப்பம் கொண்டவன் அல்ல. முதலில் நாம் நரகத்திற்கு யார் போவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான். (92: 15)

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ 7280)

 

மேற்கண்ட குர்ஆன் வசனமும் நபிமொழியும் ஒரு மனிதன் நரகம் போவதின் காரணத்தைக் கூறுகின்றன. நரகம் போகிறவர் சுயமாக தனது தேர்வின் விளைவால்தான் போகிறார். இறைநிராகரிப்பாளர்கள் நரகத்திற்குச் செல்லும்போது என்ன கூறுவார்கள் என்பதை குர்ஆனின் பல வசனங்களில் நீங்கள் அறியலாம். ஒரு நரகவாசி கூட தன்னை அநீதியாக நரகில் எறியப்படுவதாகக் கூறுவதை அவற்றில் பார்க்க முடியாது. பின்வரும் சில வசனங்களைக் கவனியுங்கள்:

நரகத்தில் அவர்களுடைய முகங்களைப் புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில், ‘எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!!” என்று கதறுவார்கள்.இன்னும், ‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் கீழ்ப்படிந்தோம். நாங்கள் தவறான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள். எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைக் கொடுத்து, அவர்கள் மீது பெரிய சாபத்தைப் போடு” என்று கூறுவார்கள். (33: 66-68)

 

(இவர்களுக்கு மட்டுமின்றி,) இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகா கெட்ட தங்குமிடம்.

 

அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள். அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும்.அதில் ஒரு கூட்டத்தினரை எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலர்கள் அவர்களை நோக்கி (‘இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்.அதற்கவர்கள், ‘உண்மைதான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) எந்த ஒன்றையும் இறக்கி வைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டில் தவிர இருக்கவில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்” என்று கூறுவார்கள்.மேலும், ‘(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவற்றை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளாகி இருக்கவே மாட்டோம்” என்று கூறி, தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான். (67: 6-11)

 

தங்கள் பாவங்களால் நரகத்திற்கு வந்ததை நரகவாசிகள் ஒப்புக்கொள்வார்கள் என்பதைப் பல வசனங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இந்த இரண்டு வசனங்களும் இறைநிராகரிப்பாளர்கள் தங்கள் சுயவிருப்பத்துடனே நரகத்தைத் தேர்வு செய்ததைக் காட்டுகின்றன.

 

அல்லாஹ்விடமிருந்து எச்சரிக்கை

ஒவ்வோர் உயிரும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப் பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்கள் மீது மிகவும் இரக்கமுடையவனாக இருக்கின்றான். (3: 30)

 

இந்தவசனம்ஒவ்வொருமனிதனுக்கும்அவன்இவ்வுலகில்பாவத்தைவிட்டுவிலகியிருக்கவேண்டும்என்றுஎச்சரிக்கைசெய்கிறது. யாரெல்லாம்பாவத்தைத்தேர்வுசெய்துகொள்கிறார்களோஅவர்கள்இந்தஎச்சரிக்கைக்குஎதிராகவேபோகிறார்கள்.

 

நியாயமான சோதனை

நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான். ஆ/யினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தன் அருளிலிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கின்றான். (4: 40)

 

(அவர்களுடைய தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும்) அதில் இருப்பதைக் கண்டு பயந்து, ‘எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும் விடாது இதில் எழுதப்பட்டுள்ளதே” என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உம்முடைய இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான். (18: 49)

 

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய) தூதரை அனுப்பாத வரை, நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை. (17: 15)

 

இவ்விரண்டு வசனங்களும் அல்லாஹ் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டான் என்றும், மக்கள் தாங்கள் செய்தவற்றுக்குத்தான் தண்டனை பெறுவார்கள் என்றும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 

அல்லாஹ்வின் கருணை

அல்லாஹ் மிகவும் கருணையாளனாக இருக்கிறான். நாம் நரக நெருப்பிற்குப் போவதை அவன் விரும்புவதில்லை. எனவே நமது நற்செயல்களுக்குப் பல மடங்கு கூலிகளை வழங்குகிறான். கணக்கிலடங்கா பாவங்களை மன்னிக்கிறான். இது அவனது விசாலமான கருணையைக் காட்டுகிறது.

 

நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான். ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தன் அருளிலிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கின்றான். (4: 40)

 

எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே தவிர (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (6: 160)

 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதி விட்டான். பிறகு அவற்றை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே -அதைச் செயல்படுத்தாவிட்டாலும்- அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழுமையான நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான். (ஸஹீஹ் முஸ்லிம் 207)

 

மேற்கண்டகுர்ஆன்வசனம்மற்றும்நபிமொழியிலிருந்துநாம்விளங்குவதுஎன்னவெனில்மக்களின்சிறியநற்செயல்களுக்காகவும்அல்லாஹ்அவர்களுக்குஅருள்புரிகிறான்.

 • ஒரு மனிதர் ஒரே ஒரு நற்செயல் செய்தாலும் அதன் கூலியை பத்து முதல் எழுநூறு மடங்கு வரையும் அதற்கு மேலும் வழங்குகிறான். அதிகபட்சமான கூலியை அல்லாஹ்வே அறிவான்.
 • ஒரு மனிதர் ஒரு நற்செயலைச் செய்ய நாடிய பிறகும் அதைச் செய்யாமல் விட்டுவிட்டால், அதை நாடியதற்காக ஒரு நற்கூலி உண்டு.
 • ஒரு மனிதர் ஒரு தீயசெயலைச் செய்ய நாடிய பிறகும் அதைச் செய்யாமல் விட்டுவிட்டால், அவர் விட்டதற்காக ஒரு நற்கூலி உண்டு.
 • ஒரு மனிதர் ஒரு தீயசெயலைச் செய்துவிட்டால், அதற்கு ஒரு தீமை மட்டுமே பதிவு செய்யப்படும்.

 

எதற்காக அல்லாஹ் இந்தளவு உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்க வேண்டும்? நீங்கள் நற்செயலைச் செய்யாதபோதும் அதை எண்ணியதற்காக நன்மை எழுதுகிறானே ஏன்? நீங்கள் ஒரு தீய செயலைச் செய்யாததற்காகவும் நன்மை எழுதுகிறானே ஏன்? தீய செயலைச் செய்துவிட்டதற்கு ஒரு தீமை என்று மட்டும் எழுதுகிற அவன், நன்மையான செயலைச் செய்தால் மட்டும் பத்திலிருந்து எழுநூறு மடங்கு வரையும் எழுதுகிறானே ஏன்?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். அல்லாஹ்வின் கருணை இது. நாம் நரகிற்குச் செல்வதை அவன் விரும்பவில்லை.

 

அல்லாஹ்வை ஒரு கணக்கு ஆசிரியர் போன்றவனாகவோ, வியாபாரி போன்றவனாகவோ நினைப்பது எவ்வளவு தவறானது என்பதை இப்போது புரிந்துகொள்ள முடியும். அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையே இல்லை. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

 

அல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தகுதிக்குத்தக்கவாறு அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. நிச்சயமாக அல்லாஹ் வலுமிக்கவனும் அனைவரையும் மிகைத்தவனுமாக இருக்கின்றான். (22: 74)

 

அல்லாஹ்வின்மன்னிப்பு

இந்தஅனைத்திற்கும்மேலாக, மனிதர்களாகியநாம்ஏராளமானதீயசெயல்களைச்செய்துவிடுகிறோம். இப்போதுஅல்லாஹ்கூறுவதைக்கேளுங்கள்:

(நபியே!) நீர் கூறும்: ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கருணை உடையவனுமாக இருக்கின்றான். (39: 53)

 

எவரேனும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தமக்குத்தாமே தீங்கிழைத்துவிட்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே வருத்தப்பட்டு) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், (அவருடைய குற்றங்களை) மிக்க மன்னிப்பவனாகவும் (அவர் மீது) நிகரற்ற கருணை உடையவனாகவுமே அவர் அல்லாஹ்வைக் காண்பார். (4: 110)

 

உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்என்றும் கூறினேன். (71: 10)

 

அல்லாஹ்வின் கருணை எவ்வளவு விசாலமானதாக இருந்தால் அவனது மன்னிப்பும் முடிவில்லாததாக இருக்கும்? இதை நடுநிலையான மனம் உணர்ந்துகொள்ள முடியும்.

 

இவ்வளவுக்குப் பிறகும் ஒரு மனிதன் தன்னை நரகிலிருந்து காத்துக்கொள்ள தவறினால் அது யாருடைய தவறு? அந்த மனிதனின் தவறா அல்லது இறைவனின் தவறா?

 

முடிவுரை

இப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவையே:

 1. தீய செயல்களின் விளைவுகள் குறித்து அல்லாஹ் நம்மை எச்சரித்துள்ளான்.
   
 2. அல்லாஹ் தனது எல்லையில்லாக் கருணையின் காரணமாக நற்செயல்களைப் பன்மடங்காகக் கணக்கிட்டு நற்கூலி வழங்குகிறான். முடிவில்லாமல் மன்னிக்கிறான்.
   
 3. சோதனை என்பது நியாயமாக இருக்கிறது. யாருக்கும் அதில் அநீதி இழைக்கப்படுவதில்லை.
   
 4. மக்கள் நரக நெருப்பில் நுழைவதற்குக் காரணம் அவர்கள்தாம்; அவர்களுடைய சுய முடிவுதான்.
   
 5. நரகத்தில் நுழைந்த மக்கள் தங்களின் தவறுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்வார்கள். தாங்கள் செய்தவற்றை எண்ணி நொந்துகொள்வார்கள்.

 

மறுபடியும் பின்வரும் இறைவசனத்தை ஞாபகத்தில் நிறுத்துவோம்:

மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான். (92: 15)

 

நாம்எதற்காகமனச்சோர்வுஅடையவேண்டும்? ஏன்நரகத்தைமட்டும்நினைத்துக்கொண்டிருக்கிறோம்? ஏன்சொர்க்கத்தைப்பற்றியும்நினைக்கவேண்டியதுதானே? அதைஅடைவதற்காகவும்அல்லாஹ்வின்திருப்தியைஅடைவதற்காகவும்முயற்சிசெய்யலாமே? எல்லாரும்அறிந்தஒருவிஷயம். ஒருவர்எதைநாடுகிறாரோஅதைஅடையவேமுயற்சிசெய்வார். நம்மைமன்னிப்பதற்குஅல்லாஹ்தயாராகஉள்ளான். நாம்அவனின்மன்னிப்பைஅடைந்துகொள்ளதயாராகஉள்ளோமா? கலப்பற்றமுறையில்அவனிடம்திரும்பியுள்ளோமா?

 

ஆதாரக்குறிப்புகள்

http://dawah.invitetogod.com/questions-asked-by-non-muslims/if-allah-is-most-merciful-why-does-he-like-to-see-people-burn-in-hell

2543 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க