அன்னை ஆயிஷாவுடன் நபியவர்களின் திருமணம் ஓர் ஆய்வு


மக்களில்பலர்நபியவர்களின்மதிப்பைச்சீர்குலைப்பதற்காகஅவர்களின்திருமணத்தைவிமர்சிக்கிறார்கள். அன்னைஆயிஷா(ரலி) அவர்கள்ஆறுவயதுசிறுமியாகஇருக்கும்போதேநபியவர்கள்அவர்களைமணமுடித்துக்கொண்டதைச்சுட்டிக்காட்டிஅவர்களைஒருகாமுகராகச்சித்தரிக்கிறார்கள்.

 

பொருளடக்கம்

 

திருமண வயது குறித்து இஸ்லாமியச் சட்டம்

இஸ்லாமிய மார்க்கத்தில் திருமண வயது என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர் பருவமடைந்தவுடனே திருமணத்திற்குத் தகுதியானவராக ஆகிவிடுகிறார். திருமண உடன்படிக்கை (நிக்காஹ்) எந்த வயதிலும் செய்யப்படலாம். ஆனால் இல்லற உறவைத் தொடங்குவது என்பது பருவம் அடைந்த பிறகுதான்.

 

எப்போதுஒருவர்பருவமடைகிறார்?

பொதுவாக8 முதல்13 வயதுக்குள்பெண்கள்பருவமடைகிறார்கள்என்றாலும், சிலருக்குஇதில்விரைவோதாமதமோஏற்படுவதும்உண்டு. அதுஒவ்வொருவரின்உடல்வாகைப்பொறுத்தது. சிலருக்குமார்பகம்வளர்ச்சிபத்துவயதில்இருந்தாலும், பதினான்குவயதில்தான்பருவமடைவார்கள். அதைப்பொருட்படுத்தவேண்டியதில்லை. ஒவ்வொருவரும்படிப்படியாகபருவத்தைஎட்டிவிடுவார்கள்.

 

பருவம்அடைகிறவயதில்வேறுபாடுஇருந்தாலும், பொதுவாகபெண்கள்விரைவாகவேபருவத்தைஎய்துகிறார்கள். பெண்கள்குறித்தபிரபலநூல்களைஎழுதியவர்கள், “இதற்குநாட்டின்அல்லதுவாழ்விடத்தின்தட்பவெப்பநிலைபிரதானகாரணமாகஇருக்கிறது. மாதவிடாய்சுழற்சிக்காகமட்டுமின்றி, பருவமடைதலுக்கானபால்உறுப்புகள்வளர்ச்சிஅடையவும்தட்பவெப்பத்திற்குப்பங்குள்ளது” என்கிறார்கள்.(Herman H. Ploss, Max Bartels and Paul Bartels, Woman, Volume I, Lord & Bransby, 1988, page 563.)

 

பெண்கள்பருவமடைதல்

ஆஸ்திரேலியஅரசின்பொதுமக்கள்நலவாழ்வுஅமைப்புகூறுகிறது: பருவமடையப்போவதைக்காட்டும்முதல்அடையாளம்எழுச்சிமிக்கவளர்ச்சிதான். நீங்கள்உயரமாகவளர்வீர்கள். உங்கள்மார்பகம்வளர்ச்சிபெறும். மறைவிடத்திலும்அக்குளிலும்முடிகள்வளரத்தொடங்கும். இதுபத்துமுதல்  பதினான்குவயதுக்குள்இருக்கலாம். சிலருக்குஇதைவிடமுன்போபின்போஇருக்கவும்வாய்ப்புண்டு. (http://www.population.health.wa.gov.au/Communicable/Resources/2107%20PubertyinGirls.pdf)

 

மெட்லைன்ப்ளஸ்எனும்மருத்துவக்களஞ்சியம்கூறுவதாவது: பருவவயதைஎட்டுவதற்குமுன்பேபருவமடைவதற்குக்காரணம்உடம்பின்வளர்ச்சிதான். (பருவமடைதல்என்பதுஉடம்பின்இனப்பெருக்கஉறுப்புகள்இயக்கம்பெறுவதே. இதுவாழ்வின்ஒருகட்டம்.) வழக்கமாகபையன்கள்சுமார்13 முதல்15 வயதுக்குள்ளும், சிறுமிகள்9 முதல்16 வயதுக்குள்ளும்பருவத்தைஎட்டுகிறார்கள். (http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001168.htm)

 

சிறுமிகள்எட்டுவயதுக்குமுன்பேபருவமடைகிறார்கள்எனில்அதற்குப்பின்வரும்காரணங்கள்இருக்கலாம்: மார்பகவளர்ச்சி, மறைவிடத்திலும்அக்குளிலும்முடிவளர்தல், பிறப்புறுப்பின்மேற்புறப்பகுதிவளர்ச்சி, முதல்மாதவிடாய்.

 

ஆயிஷா(ரலி) அவர்கள்பருவமடைந்தபின்பேஇல்லறவாழ்வைத்தொடங்கினார்கள். காரன்ஆர்ம்ஸ்ட்ரான்ங்தாம்எழுதியமுஹம்மதின்வரலாறுஎனும்நூலில்குறிப்பிடுகிறார்: ஆயிஷாதமதுமிகச்சிறியவயதில்தம்பெற்றோர்வீட்டிலேயேதங்கினார். அவரதுஇல்லறவாழ்க்கைதொடங்கியதுஅவர்பருவமடைந்தபின்புதான்என்றுதபரீகூறுகிறார். (பக்கம்157)

 

ஆக, ஒருசிறுமி8 முதல்14 வயதுக்குள்முதல்மாதவிடாயைஅடைவார். இதிலிருந்துஎல்லாச்சிறுமிகளும்14 அல்லது15 வயதில்தான்பருவமடைவார்கள்என்றில்லைஎனஆகிறது. ஆயிஷாவின்விஷயத்தில்அவரதுபருவமடைதல்எட்டுவயதில்ஆரம்பித்துள்ளது. ஒன்பதுவயதைஅடைந்தபோதுஅவருக்குமாதவிடாய்ஏற்படத்தொடங்கியுள்ளது. இதன்மூலம்அவர்ஓர்இளம்பெண்ணாகமாறிவிடுகிறார். அவரால்குழந்தைபெற்றெடுக்கவும்முடியும். அவர்சிறுமிஅல்லஎன்பதைப்புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஆதாரம்: நமக்குக்கிடைத்துள்ளதகவல்களைக்கவனிக்கும்போதுஅவர்பருவமடைகிறநிலைகளைஅடைந்துகொண்டிருக்கிறார்என்பதுஉறுதியாகிறது. நவீனஅறிவியல்பருவமடைகிறவருக்குமுடிஉதிரும்என்கிறது. இதைஅப்படியேநாம்பின்வரும்ஹதீஸில்காண்கிறோம்: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. (ஸஹீஹுல் புகாரீ 3894)

 

சிறுமிகளில்5 முதல்9 வயதுக்குள்குழந்தைபெற்றெடுத்தோர்

மிகச்சிறியவயதில்பருவமடைந்தபெண்களைஇங்குஉதாரணங்களாகப்பார்ப்போம். லினாமெடினாஎனும்சிறுமிகுழந்தைபெற்றெடுத்துள்ளார். அப்போதுஅவருக்கு5 வயதும்7 மாதங்கள், 21 நாள்கள். விக்கிபீடியாகளஞ்சியம்கூறுகிறது: லினாமெடினாவுக்குஐந்துவயதும்7 மாதங்களும்21 நாள்களும்ஆகின்றன. (அவர்பெருவில்1933 செப்டம்பர்27இல்பிறந்தவர்.) மருத்துவவரலாற்றில்இவர்தாம்மிகச்சிறியவயதில்தாயானவர். இந்தஉலகசாதனையைஇவருக்குஅடுத்துஇன்னொருவரும்ரஷ்யாவில்செய்திருக்கிறார்.(http://en.wikipedia.org/wiki/Lina_Medina)

 

தாய் நாட்டைச் சேர்ந்த ஒன்பது வயதுப் பெண்ணும் குழந்தை பெற்றெடுத்த செய்தி நியூ ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் நாளிதழில்10/3/2001 அன்று வெளியாகியுள்ளது.

 

இன்றைய உலகில் இப்போதும் எத்தனையோ நாடுகளில் மிகச் சிறிய வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். இவ்வாறிருக்க 1400 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒன்பது வயதுப் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தியதைக் காட்டி அவர் குழந்தை சித்திரவதை செய்தவர் என்று குற்றம்சாட்டுவது எப்படி சரியாகும்? மேற்கண்ட செய்தியில் ஒன்பது வயதுச் சிறுமி குழந்தையும் பெற்றெடுத்துள்ளாள். (அவளின் கணவரைக் கொடூரமானவராக சித்தரிப்பது சரியா?)

 

ஆயிஷா (ரலி) அவர்களின் பெற்றோர் தங்கள் சுயவிருப்பப்படி தம் மகளை நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துள்ளார்கள். இப்புவியிலேயே மிகச் சிறந்த ஒருவருக்கு மனைவியாக தங்கள் மகள் இருப்பதைப் பற்றி அவர்களுக்குப் பெருமிதமும் இருந்திருக்கிறது.

 

இளம்தாய்மார்களின் பட்டியல்

http://en.wikipedia.org/wiki/List_of_youngest_birth_mothers

 

நபியவர்களின் திருமணங்கள் ஒரு பார்வை

நபியவர்களின்வாழ்க்கையையும்அவர்களுடையதிருமணங்களையும்குறித்துசற்றுஆராய்வோம்.

 

மனைவியரின் பெயர்கள்

திருமணத்தின்போது அவர்களது வயது

குறிப்புகள்

கதீஜா பின்த் குவைலித்

40

இரு முறை விதவையானவர்

சவ்தா பின்த் ஜம்ஆ

50

விதவை

ஆயிஷா பின்த் அபூபக்ர்

9

9 வயதில் நபியுடன் இல்லறத்தைத் தொடங்கியவர்

ஹஃப்ஸா பின்த் உமர்

22

விதவை

ஸைனப் பின்த் குஸைமா

30

விவாகரத்தானவர்

உம்மு சலமா பின்த் அபூஉமையா

26

விதவை

ஸைனப் பின்த் ஜஹ்ஷ்

38

விதவை

ஜுவைரிய்யா பின்த் ஹாரிஸ்

20

விதவை

உம்மு ஹபீபா பின்த் அபூசுஃப்யான்

36

விதவை

மாரியா கிஃப்திய்யா பின்த் ஷமூன்

17

-

ஸஃபிய்யா பின்த் ஹுயை

17

விதவை

ருஹைனா பின்த் உம்ரூ

-

-

மைமூனா பின்த் ஹாரிஸ்

36

விதவை

 

நபியவர்கள் கதீஜாவைத் திருமணம் செய்யும்போது கதீஜாவுக்கு 40 வயதும், அவர்களுக்கு 25 வயதுமாக இருந்தது. ஆண்களுக்கு இவ்வயதில் பாலுணர்ச்சி மிகுதியாக இருக்கும் என்றபோதும் கதீஜா மரணிக்கும் வரை நபியவர்கள் யாரையும் திருமணம் செய்யவில்லை. அடுத்து, ஆயிஷாவைத் தவிர எந்தக் கன்னிப்பெண்ணையும் அவர்கள் மணக்கவில்லை. மற்றவர்கள் அனைவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்களாகவோ, விதவைகளாகவோ இருந்தார்கள்.இதிலிருந்து எதிரிகளின் ஒரு குற்றச்சாட்டு தகர்ந்துவிடுகிறது. நபியவர்கள் தமது உடல் இச்சைக்காகவே அத்தகைய திருமணங்களைச் செய்தார்கள் என்பது அடிப்படையற்ற விமர்சனம் என்றாகிறது. அவர்கள் உண்மையில் அந்த நோக்கத்துடன் செய்திருந்தால் அனைத்து மனைவியரையுமே கன்னிப்பெண்களாகவும் அழகானவர்களாகவும் தேர்வு செய்திருப்பார்கள்.

 

அவர்களின் மனைவியர் அனைவரும் முதிர் விதவைகள் (ஆயிஷா தவிர)

மேற்கண்ட அட்டவணை நபியவர்கள் ஒரு குழந்தை காமுகர் அல்ல என்பதையும் உறுதிசெய்கிறது. அது உண்மையாக இருந்திருந்தால், ஆயிஷாவை அவர்கள் ஆறு வயதில் மணமுடித்தவுடனே தாம்பத்ய உறவைத் தொடங்கியிருப்பார்கள். மேலும், 4 முதல் 7 வரையுள்ள சிறுமிகளையே மணந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவே இல்லை.

 

நபியவர்கள்ஆயிஷாவைஆறுவயதில்மணந்தார்களா?

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து தெரிய வருவது என்னவெனில், நபியவர்கள் ஆயிஷாவை ஆறு வயதில் திருமணம் செய்துவிட்டு, ஒன்பது வயதில்தான் தாம்பத்ய உறவைத் தொடங்கினார்கள் என்பதே.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு என் முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், "நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்'' என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடுகூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். (ஸஹீஹுல் புகாரீ 3894)

 

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா (ரலி) அவர்கள் இறப்பெய்திவிட்டார்கள். அதன் பின் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஆறுவயதுடையவர்களாயிருக்கும் போது அவர்களை மணந்து கொண்டார்கள். பிறகு ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 3896)

 

மற்றோர் அறிவிப்பு: நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன். (ஸஹீஹுல் புகாரீ 5133)

 

மற்றோர் அறிவிப்பு: நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2780)

 

இல்லறம்தொடங்கியபோதுஆயிஷாவின்வயது

ஒருவர்முதலில்இங்குப்புரிந்துகொள்ளவேண்டியது, 1400 வருடங்களுக்குமுன்புசிறுவயதுதிருமணங்கள்வழக்கமானவை. இக்காலத்தில்போல்அல்ல. அரபுகள்சிறுமிகளைத்திருமணம்செய்துகொள்வதைஅக்காலத்தில்சிறுவயதுப்பெண்களைத்திருமணம்செய்வதாகவேபார்த்தார்கள். காலங்கள்மாறியதால்பார்வைகள்மாறியுள்ளன.

 

வரலாற்று உண்மை என்னவெனில், 9 முதல் 14 வயது வரையான சிறுமிகளை ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலும் மணமுடிப்பது வழக்கில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவிலும் இத்தகைய திருமணங்கள் இருந்துள்ளன.எனினும், எந்த வரலாற்று ஆய்வாளரும் இப்படித் திருமணம் செய்த மக்களை தகாத காரியங்கள் செய்தவர்களாக வாதிக்கவில்லை. உண்மையில் யாராவது அப்படிச் சொன்னால் அவர்களைத்தாம் ஆணவக்காரர்களாக, புத்தியற்றவர்களாக, கெட்டவர்களாக வரலாற்றாளர்கள் கூறுவார்கள்.

 

ஆயிஷா (ரலி) அவர்களைச் சிறு வயதில் மணந்ததைப் பற்றி அக்காலத்தில் வாழ்ந்த எவருமே குறை கூறியதில்லை. அப்படி எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் ஆயிஷாவை மணமுடித்துத் தர அவர்களது தந்தை அபூபக்ர் விரும்பியதும், அன்றைய சமுதாய மக்களும் அதை வரவேற்று மகிழ்ந்ததுமாகத்தான் ஆதாரங்கள் உள்ளன.

 

நபியவர்கள் ஆயிஷாவை மணந்தது குறித்து மக்கள் அறிந்தே இருந்தார்கள். ஆறு வயதில் திருமணம் நடந்துவிட்டாலும் ஒன்பதில்தான் அவர்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினார்கள் என்பதையும் அறிந்திருந்தார்கள். அதற்குக் காரணம் ஆயிஷா பருவமடைகிற வயதை ஒன்பதில்தான் அடைந்தார்கள் என்பதாகும். இஸ்லாமியச் சட்டப்படி அச்சமயம் ஆயிஷா ஓர் இளம்பெண்ணாகத் திருமண வாழ்வுக்குத் தயாரானவர்களாக இருந்தார்கள்.

 

நபியவர்கள்உடல்இச்சைக்காகதிருமணம்செய்யவில்லை

நபியவர்கள்ஆயிஷாவைமணமுடிப்பதுகுறித்துஒருகனவுகண்டார்கள். ஸஹீஹுல்புகாரீஹதீஸ்தொகுப்பில்அச்செய்திபதிவாகியுள்ளது.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:"நான் உன்னைக் கனவில் இரு முறை கண்டேன். உன்னைப் பட்டுத்துணியின் துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, "இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், "இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (புகாரீ 3895)

 

இத்திருமணம் நபியவர்களின் சுயமுடிவு அல்ல. கவ்லா பின்த் ஹகீம்(ரலி) எனும் பெண்மணி நபியவர்கள் தமது நெருங்கிய தோழரின் உறவைப் பலப்படுத்திக்கொள்ள இவ்வாறு திருமணம் செய்துகொள்ளும்படி ஆலோசனை கூறினார்கள். அபூபக்ர் அஸ்ஸித்க் அவர்களை விட நபியவர்களின் நெருங்கிய தோழர் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் அவர் மிக மிக முக்கியமானவர். நபியவர்களின் இறப்புக்குப் பின் அவரே முதல் கலீஃபாவாக இருந்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் அபூபக்ரின் மகளாவார்.

 

தமது தோழர் தம்மிடம் பெண் கேட்டது அபூபக்ருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையே தந்தது. அதன் மூலம் தம் நட்பை மேலும் பலப்படுத்திக்கொண்டார்.

 

இங்கு இன்னொரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். நபியவர்கள் பெண் கேட்பதற்கு முன், ஆயிஷாவை ஜுபைர் இப்னு முத்இம் அவர்களுக்குப் பேசி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அபூபக்ர் இஸ்லாமைத் தழுவியிருந்ததின் காரணமாக ஜுபைரின் பெற்றோர்கள் அந்தத் திருமணப் பேச்சை முறித்துக்கொண்டார்கள். இதிலிருந்து அக்காலத்தில் இப்படி சிறு வயதுத் திருமணங்கள் நடப்பது சாதாரணம் என்றும், எவருமே இதை ஒரு தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிய வருகிறது. இத்திருமணத்தின் மூலம் ஆயிஷா அவர்கள் நபியவர்களின் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தார்கள்.

 

அரபுகளின்பொதுவானவழக்கம்

இத்திருமண முறைகள் அரபுகளின் பொதுவான வழக்கத்தில் இருந்தன.

இமாம் ஷாஃபிஈ கூறினார்கள்: நான் யமன் தேசத்தில் தங்கியிருந்தபோது அங்குள்ள சிறுமிகள் அதிகமானோர் ஒன்பது வயதிலேயே முதல் மாதவிடாயை அடைவதுண்டு. (சியர் அஃலாமுல் நுபலா பாகம் 10, பக்கம் 91)

இமாம் பைஹகீ அவர்களும் இமாம் ஷாஃபிஈ அவர்களின் வார்த்தைகளை அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நான் (யமனில் உள்ள) சன்ஆ நகரில் ஒரு பாட்டியைக் கண்டேன். அவருடைய வயது 21 ஆகும். அவர் ஒன்பது வயதில் பருவமடைந்து பத்து வயதில் குழந்தையும் பெற்றுவிட்டார். (சுனன் அல்பைஹகீ அல்குப்றா 1/319)

 

இப்னு உகைல் மற்றும் உஃபத் அல்மஹ்ல்பை ஆகியோரிடமிருந்து இப்னுல் ஜவ்ஸி அறிவிக்கிறார்கள். அப்பாத் இப்னு அப்பாத் அல்முஹ்லபி கூறுகிறார்கள்: முஹ்லபா கூட்டத்துப் பெண் ஒருவர் பதினெட்டு வயதிலேயே பாட்டியானதை நான் கண்டிருக்கிறேன். அவர் ஒன்பது வயதில் தமக்கு மகளைப் பெற்றார். அவருடைய மகளும் ஒன்பது வயதில் ஒரு மகளைப் பெற்றெடுத்தார். ஆக, பதினெட்டு வயதில் இவர் பாட்டியாகிவிட்டார். (தஹ்கீக் ஃபீ அஹாதீஸ் அல்கிலாஃப், பாகம் 2, பக்கம் 267)

 

கிறித்துவப்புனிதர்கள், அரசர்கள், கனவான்கள்ஆகியோரின்திருமணங்கள்

மேரிஅவர்கள்ஜோசஃபைமணந்துகொண்டதாகக்கூறுமிடத்தில்கத்தோலிக்ககளஞ்சியம்கூறுகிறது: கண்ணியமானமனிதரானஜோசஃபுக்குமேரிமணமுடிக்கப்பட்டார். அப்போதுமேரி12 முதல்14 வயதுக்குள்இருந்தார். ஜோசஃப்போதொண்ணூறுவயதைஎட்டியிருந்தார்.(http://www.newadvent.org/cathen/08504a.htm)

 

ஆண்கள்திருமணம்செய்ய14 வயதுபூர்த்தியாகியிருக்கவேண்டும். பெண்களுக்கு12 வயதுபூர்த்தியாகியிருக்கவேண்டும். இல்லையெனில்அவர்களின்திருமணம்செல்லாது. (விதிவிலக்காகஇதற்கும்கீழானவயதில்அவர்கள்பருவமடைந்திருந்தால்தவிர).. திருச்சபைமரபுப்படிஇந்தச்சட்டம்இங்கிலாந்து, ஸ்பெய்ன், போர்த்துகீஸ், கிரீஸ்மற்றும்ஆஸ்ட்ரியாஆகியஇடங்களில்நடைமுறையில்இருக்கும். அமெரிக்காவின்சிலபகுதிகளிலும்திருச்சபைமரபுப்படி14 மற்றும்12 வயதுசட்டம்நடைமுறையில்உண்டு. மற்றவர்கள்இந்தவயதைஅதிகப்படுத்திவிட்டார்கள். (Catholic Encyclopedia, http://www.newadvent.org/cathen/01206c.htm)

 

கத்தோலிக்ககளஞ்சியம்இன்னும்கூறுகிறது:

பொதுவானசட்டப்படிஒருவர்திருமணத்திற்குத்தகுதியானவயதைஅடைவது14 வயதிலாகும். இதுஆண்களுக்கு. பெண்கள்எனில்பன்னிரண்டுவயதாகும். 12 மற்றும்14 வயதுகள்ஒப்புக்கொள்ளப்பட்டவைஆகும். ஏழுவயதிற்கும்கீழேதிருமணங்கள்நடந்தால்அவைஆண், பெண்இருசாராருக்குமேசெல்லாததாகும். ஆனால்ஏழுமுதல்பன்னிரண்டு(பெண்ணுக்கும்), ஏழுமுதல்பதினான்கு(ஆணுக்கும்) எனஅங்கீகரிக்கப்பட்டவயதைஅடையும்முன்புதிருமணம்செய்தால்அதுசரியானமுறையல்ல. எனினும்அத்திருமணங்கள்செல்லாததாகிவிடாது. (Catholic Encyclopedia, http://www.newadvent.org/cathen/09691b.htm)

 

பன்னிரண்டுவயதுதான்பெண்ணுக்குரியவரம்புஎன்றாலும்கிறித்துவதந்தைகள்தங்கள்மகள்களுக்குஅதற்கும்முன்பாகவும்திருமணம்செய்துவைத்துள்ளனர்.

 

மத்தியகாலகிறித்துவர்கள்தங்கள்பெண்கள்திருமணம்செய்வதற்குக்குறைந்தபட்சவயதுவரம்பாகபன்னிரண்டையேபின்பற்றினார்கள். ஆனாலும்இதுமுடிவானவயதுவரம்பாகஇருக்கவில்லை. கத்தோலிக்கசபைஅதிகாரிகள்தர்க்கரீதியாகவும்இந்தவயதுவரம்பைத்தளர்த்தியிருக்கிறார்கள். அதாவது, இயற்கையில்ஒருகுழந்தையின்உடல்வாகுவிரைவில்பருவமடைந்துதாம்பத்யத்திற்குத்தகுதியானதாகஆகியிருந்தால், அப்போதுவயதைப்பொருட்படுத்தத்தேவையில்லைஎன்றனர். கத்தோலிக்கஅறிஞர்ஒருவர், “ஒருசிறுவன்பதினான்றுவயதைஅடையும்முன்பேஅவன்பருவமடைந்திருப்பதுஉறுதியானால், அல்லதுஒருசிறுமிபன்னிரண்டுவயதைஅடையும்முன்பேபருவமடைந்திருந்தால், அவர்கள்திருமணம்செய்வதுதிருப்தியளிக்குமானால், அப்போதுஇருசாராரும்செய்கின்றதிருமணம்செல்லத்தக்கதேஎன்கிறார்.(Mark E. Pietrzyk, http://www.internationalorder.org/scandal_response.html)

 

யூதச்சட்டம்போலவேகிறித்துவச்சட்டமும்திருமணம்செய்வதற்கானகுறைந்தபட்சவயதையும், திருமணம்செல்லுபடியாவதற்கானகுறைந்தபட்சவயதையும்வேறுபடுத்தியுள்ளது. பன்னிரண்டுவயதில்ஒருபெண்சுயமாகத்தன்திருமணத்தைக்குறித்துமுடிவுசெய்யலாம். ஆனால்அதற்குமுந்திஏழுவயதிலிருந்துஎன்றால், அப்போதுஅவளுடையதந்தைஅத்திருமணத்தைமுடிவுசெய்யலாம். அவளின்அனுமதியைக்கேட்கத்தேவையில்லை. திருமணம்செல்லுபடியாவதற்கானகுறைந்தபட்சவயதுஏழில்இருந்துதொடங்குகிறது

 

 1. புனிதர்அகஸ்டின்(கி.பி.354-439): கிறித்துவஇறையியல்கோட்பாட்டைஉருவாக்கியதில்பெரும்பங்குபுனிதர்அகஸ்டினுக்குஉண்டு. அவர்ஒருபத்துவயதுபெண்ணுடன்திருமணஒப்பந்தம்செய்துகொண்டார். அப்போதுஅவருக்கு31 வயதாகியிருந்தது. அப்பெண்ணின்உடல்முதிர்ச்சிஅடைவதற்காகஇரண்டுவருடங்கள்அவர்காத்திருந்தார். பிறகுஅவள்புனிதர்அகஸ்டினிடம்பன்னிரண்டுவயதில்குடும்பவாழ்வைத்தொடங்கினாள். கிறித்துவர்களால்மிகவும்புனிதப்படுத்தப்படும்அகஸ்டினேஒருபத்துவயதுசிறுமியைமணந்திருக்கும்போது, எப்படிகிறித்துவர்கள்நபிமுஹம்மதுஆயிஷாவைத்திருமணம்செய்ததைத்தாக்கிப்பேசுகிறார்கள்? http://www.internationalorder.org/scandal_response.html

 2. புனிதர்அக்னஸ்: இப்பெண்மணிகிறித்துவஉலகில்மிகப்பிரபலம். கற்புக்கரசிஎன்றுஇவரைப்போற்றுவர். இவருக்குத்திருமணம்நடந்தபோதுபன்னிரண்டுவயதுக்கும்கீழ்இருந்தார். ஒருவிதத்தில்ஆயிஷாவின்வயதுக்குச்சமமானவயதில்இவரின்திருமணம்நடந்தது. உண்மைஇவ்வாறிருக்கமுஸ்லிம்களின்விவகாரத்தில்எப்படித்தான்கிறித்துவர்களால்மூக்குநுழைக்கமுடிகிறது?

  டொமஸ்டிக்சர்ச்டாட்காம்(Domestic-Church.com) கூறுகிறது: அக்னஸ்எனும்பெயருக்குகிரேக்கமொழியில்கற்புஅல்லதுதூய்மைஎன்றும், இலத்தீன்மொழியில்ஆட்டுக்குட்டிஅல்லதுபாதிக்கப்பட்டவர்என்றும்பொருள். அக்னஸைதூய்மைக்குக்காவல்பெண்ணாகதிருச்சபைகருதுகிறது. ஆரம்பக்காலத்தில், அதாவதுகி.பி. 303 மார்ச்காலகட்டத்தில், தியோகிளிடேன்என்கிறமன்னன்கிறித்துவர்களைநசுக்கிஅடக்கிமுறைசெய்தான். அவனால்கொல்லப்பட்டார்அக்னஸ். அவர்இறக்கும்போதுபன்னிரண்டுஅல்லதுபதிமூன்றுவயதுதான். (வயதில்கருத்துவேறுபாடும்உண்டு.) அவ்வளவுசிறியவயதிலும்அக்னஸின்அழகும்செல்வமும்ரோம்நகரசீமான்களைமிகவும்கவர்ந்துஈர்த்தது. அவர்கள்அவரைத்திருமணம்செய்துகொள்ளபோட்டியிட்டார்கள்.(http://www.domestic-church.com/CONTENT.DCC/19980101/SAINTS/STAGNES.HTM)

 3. ஆன்டெக்ஸைசேர்ந்தபுனிதர்எட்விங்: அநாதைகளின்காப்பாளராககிறித்துவர்கள்மிகவும்போற்றுவதுபுனிதர்எட்விஙை. இப்பெண்மணிசிலேசியாவைஆண்டமுதலாம்ஹென்ரிக்குப்பன்னிரண்டுவயதில்திருமணம்செய்விக்கப்பட்டார்.

 4. காஸ்கியாவைச்சேர்ந்தபுனிதர்ரிட்டா: ஆதரவற்றவர்களின்காப்பாளராகக்கிறித்துவர்கள்போற்றும்இப்பெண்ணுக்குப்பன்னிரண்டுவயதில்பவ்லாமன்சினிஎன்பவருடன்திருமணம்நடந்துள்ளது.

 5. இயேசுவின்சிலுவைமரணத்தின்போதுஇருந்தவராகச்சொல்லப்படும்புனிதர்மேரிக்குப்பதிமூன்றுவயதில்திருமணம்நடந்துள்ளது.

 6. போர்த்துகீஸைச்சேர்ந்தபுனிதர்எலிசபெத். இப்பெண்மணியைப்புனிதர்பிரான்சிஸ்உடையமூன்றாம்கட்டளையின்காப்பாளர்என்பர். இவருக்குப்பன்னிரண்டுவயதில்திருமணம்நடந்துள்ளது.

 7. புனிதர்ஜோசஃப். இவரைஇயேசுவின்மாற்றுத்தந்தையாகச்சொல்லப்படும். இவருடையதொண்ணூறுவயதுகளில்பன்னிரண்டுவயதுடையகன்னிமேரியைமணந்தார். சிலர்ஜோசஃபுக்குஅப்போதுமுப்பதுவயதுதான்இருக்கும்என்கிறார்கள். எப்படிஇருப்பினும்அவர்ஒருவளர்ந்தமனிதராகஇருந்தபடி, பன்னிரண்டுவயதுடையமேரியைமணந்திருக்கிறார்.

 

இன்னும்பலஉதாரணங்களும்இவ்வாறேஅமைந்துள்ளன.

 1. இரண்டாம்ரிச்சர்ட், இவர்தமதுமுப்பதுவயதில்ஃபிரென்சுஇளவரசிஇசபெல்லாவைமணந்தார். அப்போதுஇசபெல்லாவுக்குவயதுஏழுதான். http://en.wikipedia.org/wiki/Isabella_of_Valois

 2. மிலனின் டச்சசும், சாவாயின் பையின்காவும் பதிமூன்று வயதில் திருமணம் செய்துகொண்டார்கள்.http://www.academia.edu/990174/Medieval_Marriage

 3. தியோடோரா காம்னினா தமது பதிமூன்று வயதில் தம்மை விட இரண்டு மடங்கு வயதான மன்னர் மூன்றாம் பால்ட்வின்னை மணந்துகொண்டார். http://www.academia.edu/990174/Medieval_Marriage

 4. மன்னர் முதலாம் அட்ரோனிகஸ்பைசாந்திய பேரரசின் மாமன்னர். அவர் தமது அறுபத்து நான்காம் வயதில் ஃபிரான்சைச் சேர்ந்த பன்னிரண்டு வயது அக்னஸைத் திருமணம் செய்தார்.http://www.academia.edu/990174/Medieval_Marriage

 5. போர்த்துகீஸைச் சேர்ந்த மன்னர் டெனிஸ் பன்னிரண்டு வயதான புனிதர் எலிசபேத்தை மணந்தார்.

 6. இமோலா மற்றும் மோர்லியின் அரசர் கிரோலாமோ ரியாரியோ ஒன்பது வயதான கேட்டரின் ஸ்போர்சாவை மணந்தார்.

 7. நவர்ரியின் மூன்றாம் ஜென்னி பதிமூன்றாம் வயதில் திருமணம் செய்துகொண்டவர்.http://en.wikipedia.org/wiki/Jeanne_d'Albret

 8. கியோவன்னி ஸ்போர்சா பதிமூன்று வயதான லுக்ரேசியா போர்கியாவை மணந்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Giovanni_Sforza

 9. நார்வேயைச் சேர்ந்த மன்னர் ஆறாம் ஹாகன் பத்து வயதான ராணி மார்கரேட்டை மணந்தார். http://en.wikipedia.org/wiki/Margaret_I_of_Denmark

 10. எஸ்ஸெக்ஸைச் சேர்ந்த கவுன்ட் அக்னிசுக்கு மூன்று வயதிலேயே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்தது. அப்போது மணமகனின் வயது சுமார் ஐம்பதாகும். http://en.wikipedia.org/wiki/Isabella_of_Angoul%C3%AAme

 11. வேல்ஸ் நகரைச் சேர்ந்த இளவரசர் எட்வர்ட், ஃபிரென்ச் மன்னரின் மகள் இசபெல்லாவை மணந்தார். இசபெல்லாவுக்கு அப்போது வயது ஏழு.

 12. இரண்டாம் ரோமனஸ் நான்கு வயதே ஆன பெர்த்தாவை மணந்துகொண்டார். பெர்த்தா இத்தாலியின் இளவரசியாவாள்.

 13. செர்பியாவின் ஆட்சியாளர் ஸ்டீஃபன் மிலுட்டின் ஐந்தே வயதான சைமோனிஸ் என்ற சிறுமியை மணந்துகொண்டார். இச்சிறுமி பேரரசர் இரண்டாம் அன்ட்ரோனிக்ஸ் உடைய மகள். இவரை மணக்கும்போது ஸ்டீஃபனின் வயது ஐம்பதாகும்.

 14. முதலாம் எட்வர்ட் ஒன்பது வயதான எலினாரை மணந்துகொண்டார்.

 15. ஸ்ரெவ்ஸ்பரி சேர்ந்த ரிச்சர்ட், இவர் மன்னர் நான்காம் எட்வர்டின் மகன், நார்ஃபோல்க்கைச் சேர்ந்த ஐந்து வயதான அன்னி மவ்பிரேயை மணந்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Richard_of_Shrewsbury,_1st_Duke_of_York

 16. மேரி ஸ்டீவார்ட் தமது ஆறு வயதில் எட்டாம் ஹென்ரியைத் திருமணம் செய்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Mary,_Queen_of_Scots

 

இன்னும்பலஉதாரணங்களும்உண்டு.

 

நபியவர்களின்திருமணம்குறித்துஅக்காலத்துஎதிரிகளின்மனநிலை

குறைஷிகள்நபியவர்களைத்தாக்குவதற்கானஎந்தச்சந்தர்ப்பத்தையும்வீணடிக்காதவர்களாகஇருந்தவர்கள். இத்திருமணத்தைஅவர்கள்தங்களுக்குக்கிடைத்தபொன்னானவாய்ப்பாகப்பயன்படுத்திபலவழிகளில்அவர்களைநோகடித்திருக்கலாம். விமர்சனங்களால்கொட்டித்தீர்த்திருக்கலாம். ஆனால்அவர்களோஇத்திருமணத்தைஎவ்விதத்திலும்தவறாகஎடுத்துக்கொள்ளவில்லை. சொல்லப்போனால்ஆயிஷாவைநபியவர்கள்பெண்கேட்டுள்ளார்கள்என்றுஅறியவந்தபோதுஅதனைஎதிர்பார்த்தவர்களாகவேஎடுத்துக்கொண்டார்கள்

 

நபியவர்களைமணமுடித்துக்கொண்டதுகுறித்துஆயிஷாஒருக்காலும்அதிருப்திஅடையவில்லை

ஆயிஷா(ரலி) அவர்களால்ஆயிரக்கணக்கானஅறிவிப்புகள்வரலாற்றில்பதிவாகியுள்ளன. அவற்றில்ஓர்ஆச்சரியமானவிஷயம்என்னவெனில், ஒரேஓர்அறிவிப்பில்கூடநபியவர்களைத்திருமணம்செய்துகொண்டதுகுறித்துஅவர்கள்அதிருப்தியாகஎதையும்சொல்லவில்லை. இதிலிருந்துஅவர்களுக்குஇத்திருமணம்குறித்துஎந்தப்பிரச்சினையும்இருக்கவில்லைஎன்றுதெரிகிறது. உண்மைஎன்னவெனில், ஆயிஷாவின்பலஅறிவிப்புகள்வாயிலாகஅவர்கள்நபியவர்களைமிகவும்நேசித்துவாழ்ந்ததைஅறியமுடிகிறது. எந்தளவுஎன்றால், மற்றமனைவியர்கள்நபியவர்களுக்குஅருகில்இருந்தநேரங்களில்ஆயிஷாரோஷம்கொண்டார்எனும்அளவுக்குஅவர்களின்நேசம்இருந்திருக்கிறது. இத்திருமணத்தால்அவர்கள்எல்லையில்லாமகிழ்ச்சியில்இருந்தார்கள்என்பதற்குஇந்தஆதாரம்போதாதா? அவர்களுக்கேஇதுபிரச்சினைஅல்லஎனும்போதுமற்றவர்களுக்குஎன்னபிரச்சினை?

 

ஆயிஷாவுக்குஇத்திருமணத்தில்மிகப்பெரியதிருப்திஇருந்தது. நபியவர்களிடமிருந்துஇஸ்லாமைஅதிகம்கற்றுக்கொண்டுஅதற்குமிகச்சிறந்தபக்கபலமாகஇருந்தார். அவரதுகாலத்தில்ஏராளமானபெண்களுக்கும்ஆண்களுக்கும்அவரொருமகத்தானஆசிரியையாகவிளங்கினார். அவரதுபெற்றோர்கள்இத்திருமணத்தில்பூரணதிருப்திஅடைந்தார்கள். நபியவர்களின்காலத்தில்அவருடையதோழர்களோ, எதிரிகளோ, யாராகஇருந்தாலும்ஒருவர்கூடஇத்திருமணத்தைக்கண்டுஆச்சரியமோ, ஆட்சேபணையோவெளிப்படுத்தவில்லை

 

திருமணத்திற்குப்பின்னேஉள்ளமகத்தானஞானம்

நபிமுஹம்மது(ஸல்) அவர்களைத்தமதுசிறுவயதில்திருமணம்செய்துகொண்டதின்மூலம்நபியின்தனிப்பட்டவாழ்க்கைக்குநேரடிசாட்சியாகஆயிஷாஅமைந்தார்கள். தாம்கண்டவிஷயங்களைத்தமதுஅடுத்ததலைமுறைக்குஅறிவித்தார்கள். சிறுவயதில்தான்மக்களுக்குஅதிகநினைவாற்றல்இருக்கும். கிரகிக்கும்ஆற்றலும்மகத்தானஅளவில்இருக்கும். ஆயிஷா(ரலி) அவர்கள்நபியவர்களின்இறப்புக்குப்பின்சுமார்46 வருடங்கள்உயிருடன்இருந்தார்கள். இக்காலம்முழுதும்மக்களுக்குஇஸ்லாமியமார்க்கவிஷயங்களைக்கற்றுக்கொடுத்தார்கள். குறிப்பாக, குடும்பமற்றும்திருமணவாழ்க்கைதொடர்பானவிஷயங்களைக்கற்பித்தார்கள்.

 

ஆன்மிகமுறையிலும்நிஜவாழ்வில்நெருக்கமாகமனைவியாகவாழ்ந்தமுறையிலும்நபியவர்களிடமிருந்துபலவிஷயங்களைஆயிஷாஅறிவித்துச்சென்றுள்ளார்கள். அவைஎல்லாமுஸ்லிம்களுக்கும், குறிப்பாகபெண்களுக்கும்எல்லாக்காலங்களிலும்சிறந்தமுன்மாதிரியாகஅமைந்திருக்கின்றன. அவர்மிகச்சிறந்தஅறிவுஜீவியாகஇருந்ததால், ஆன்மிகப்போதனைசெய்யும்பெண்ணாகவும்அறிஞராகவும்ஆனார். அவருடையதிறமைகள்நபியவர்களின்மார்க்கப்பணிக்குஉதவியாகஅமைந்து, இஸ்லாமைமேலோங்கச்செய்தது. ஆயிஷா(ரலி) அவர்கள்இறைநம்பிக்கையாளர்களின்அன்னைஎனும்உயர்தகுதியைப்பெற்று, மனைவியருக்கும்தாய்மாருக்கும்சிறந்தமுன்மாதிரியாகஅமைந்தார்கள். அதுமட்டுமின்றி, குர்ஆனுக்குவிரிவுரையாளராகவும், நபிமொழிகளையும்இஸ்லாமியச்சட்டங்களையும்விளக்குபவராகவும்வாழ்ந்தார்கள்.

 

குறைந்தது2210 நபிவழிச்செய்திகளையாவதுஅவர்கள்அறிவித்துள்ளார்கள். அவைமுஸ்லிம்களுக்குநபியவர்களின்தினசரிவாழ்வையும்பழக்கவழக்கங்களையும்தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம்நபியவர்களதுவழிமுறை(சுன்னா) பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர்வழியாகஉள்ளஹதீஸ்கள்கிடைக்காமல்போயிருந்தால், இஸ்லாமைப்புரிந்துகொள்வதற்கானஹதீஸ்கல்வியில்பாதிஅழிந்திருக்கும்என்கின்றனர்இஸ்லாமியஅறிஞர்கள்.

 

ஆயிஷாஎப்போதுமேசத்தியத்திற்குஆதரவாய்நின்றார்கள். இஸ்லாமைப்பலருக்கும்கற்றுக்கொடுத்தார்கள். இஸ்லாமியச்சட்டங்கள்பலவற்றுக்கு, குறிப்பாகபெண்களுக்கானசட்டங்கள்பலவற்றுக்குஅவர்களின்அறிவிப்புகள்அதிகாரப்பூர்வமானதாய்அமைந்துள்ளன.

 

ஓர்ஆசிரியைஎனும்நிலையில்அவர்களின்பேச்சுமிகத்தெளிவானதாகவும்தாக்கமுள்ளதாகவும்இருந்தன. அஹ்னஃப்எனும்தாபிஈகூறுகிறார்: “நான்அபூபக்ர், உமர், உஸ்மான், அலீமற்றும்இன்றையநாள்வரையானகலீஃபாக்கள்வரைஅனைவரையும்பேச்சையும்கேட்டிருக்கிறேன். ஆனால்ஆயிஷா(ரலி) அவர்களின்வாயிலிருந்துவெளியானபேச்சைவிடமிகஆழமான, தெளிவான, அழகானபேச்சையாரிடமிருந்தும்கேட்டதில்லை.”

 

அபூமூசாஅல்அஷ்அரீ(ரலி) அவர்கள்நபியவர்கள்கூறியதாககூறுகிறார்கள்: மற்றபெண்களைக்காட்டிலும்ஆயிஷாவுக்குள்ளசிறப்புஎன்பதுமற்றஉணவுகளைக்காட்டிலும்(இறைச்சியும்ரொட்டியும்கலந்தமைந்த) ஸரீதுக்குரியசிறப்பைப்போன்றதாகும். ஆண்களில்பலர்முழுமைஅடைந்துள்ளார்கள். ஆனால்பெண்களில்இம்றானின்மகள்மர்யம், ஃபிர்அவ்னுடையமனைவிஆசியாஆகியோரேமுழுமைஅடைந்தவர்கள். (மற்றோர்அறிவிப்பில்கதீஜா(ரலி) அவர்களையும்குறிப்பிட்டுவந்துள்ளது.) ஸஹீஹுல்புகாரீயின்அறிவிப்புஇது.

 

மூசாஇப்னுதல்ஹா(ரலி) அவர்கள்கூறுகிறார்கள்: நான்ஆயிஷாவைவிடமிகவும்நேர்த்தியாகப்பேசுகிறஒருவரைக்கண்டதில்லை. (முஸ்தத்ரகுல்ஹாகிம்)

 

இந்தஆதாரங்கள்நபியவர்களும்ஆயிஷாவும்திருமணம்செய்துகொண்டதுஇறைநாட்டம்என்பதைத்தெளிவுபடுத்துகிறது. நபியின்தனிப்பட்டநாட்டம்இல்லை. அல்லாஹ்வின்நாட்டம்அது. அதைஆயிஷாவும்கூறுகிறார்கள்: நபியவர்கள்என்னிடம், "நான் உன்னைக் கனவில் இரு முறை கண்டேன். உன்னைப் பட்டுத்துணியின் துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, "இது உங்கள் மனைவிதான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், "இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று கூறினார்கள். (புகாரீ 3895)

 

இன்றுஒருவரிடம், “எதில்ஆயிஷாபிரபலம்? ஆயிஷாவின்சிறப்பம்சம்என்ன? அழகா? செல்வமா?” என்றுகேட்டால், உடனேஅல்ல, அவரதுமார்க்கஅறிவுதான்என்பார். இதிலிருந்தேதெரியவில்லையா, இத்திருமணம்இறைநாட்டத்தின்அடிப்படையில்நடந்துள்ளதுஎன்பது?

 

யூத, கிறித்துவமதங்களில்திருமணவயது

மக்கள்யூதமதத்தைக்கவனித்தால், அங்குமூன்றுவயதுசிறுமியைத்திருமணம்செய்வதும்அனுமதிக்கப்பட்டதைஅறிந்துகொள்வார்கள்.

 

யூதஇணையதளம்Jewfaq.orgகூறுகிறது: யூதச்சட்டப்படிகுறைந்தபட்சதிருமணவயதுஎன்பதுபையன்களுக்கு13 வயதாகவும், சிறுமிகளுக்கு12 வயதாகவும்உள்ளது. எனினும், நிச்சயதார்த்தம்இவ்வயதுக்குமுன்பேகூடசெய்யப்பட்டதைமத்தியகாலகட்டத்தில்காண்கிறோம்.(http://www.jewfaq.org/marriage.htm)

 

பன்னிரண்டுவயதுஏறத்தாழபருவமடைகிறவயதாகும். யூதச்சட்டப்படிஇந்தவயதில்திருமணம்செய்வதுஅனுமதிக்கப்பட்டதுமட்டுமல்ல, ஆர்வமூட்டப்பட்டதும்கூட. தங்கள்மகள்கள்பருவமடைந்தவுடனேவிரைவில்திருமணம்செய்துவைக்குமாறுதந்தைகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. யூதஅறிஞர்கள்பலர்ஒருபெண்பருவமடைந்தவுடனேதாமதமின்றிதிருமணம்செய்துவைக்குமாறுகூறுகிறார்கள்.

 

யூதஎன்சைக்ளோபீடியாகூறுகிறது: நேர்மறையாகப்பார்க்கும்போதுரப்பீகளின்விளக்கப்படிபைபிளில்வரும்முதல்கட்டளைமனிதகுலவிருத்தியைப்பற்றியதாகும். (ஆதியாகமம்1.28) இதன்மூலம்இஸ்ரவேலர்ஒவ்வொருவரும்விரைவில்திருமணம்செய்துகொள்வதுகடமையாகும்... சிலர்குழந்தைகள்பருவமடைந்தவுடனேவிரைவில்திருமணம்செய்துவைக்கவேண்டும்என்கிறார்கள். (http://www.jewishencyclopedia.com/view.jsp?letter=M&artid=216)

 

மிகச் சிறிய குழந்தையாக இருக்கும்போது கூட திருமணம் செய்துகொள்கிற முறையை தல்மூதும் அனுமதித்துள்ளது. பின்வரும் வரிகளை வாசியுங்கள்: சன்ஹென்ரின் உடைய 55வது கட்டளையில், “மூன்று வருடங்களும் ஒரு நாளும் அடைந்த சிறுமியை அவளுடன் உடல்சேர்க்கை செய்வதின் மூலம் திருமணம் செய்யலாம்” என்று கூறப்படுகிறது. சன்ஹென்ரின் 54வது கட்டளையில், “ஒன்பது வயதுக்கும் குறைவான ஒரு குழந்தையுடன் உடல்சேர்க்கை செய்வது அதற்கும் அதிகமான வயதுடைய பெண்ணுடன் செய்வது போன்றாகாது” என்று கூறப்படுகிறது.

 

தம்மூதில் கதொபோத்தின் 11வது கட்டளையில், “ஒரு பருவமடைந்த ஆணுக்கும் ஒரு சிறுமிக்கும் இடையே நடக்கும் உடல்சேர்க்கை என்பது சாதாரணமானதுதான்” எனப்படுகிறது. இன்னும் சயீது ரபி ஜோசஃப் எழுதுகிறார்: மூன்று வருடங்களும் ஒரு நாளும் ஆகிவிட்ட சிறுமி உடலுறவுக்குத் தகுதியானவளே.

 

நாம் இத்துடன் மார்க் இ. பிட்ரிஸ்க் உடைய வார்த்தைகளால் இதை முடிக்கிறோம்: தல்மூது சட்டப்படி திருமணத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வயது என்பது பெண்களுக்குப் பன்னிரண்டாகவும், ஆண்களுக்குப் பதிமூன்றாகவும் உள்ளது. இதற்கும் குறைந்த வயதுகளில் திருமணம் செய்வது பொதுவாக விரும்பத்தகாததாக இருக்கிறது. எனினும், ஒரு தந்தை தமது மகளின் மிகச் சிறிய வயதிலேயே நிச்சயதார்த்தம் செய்துவைப்பதும், அதை முடிவுக்குக் கொண்டு வந்து இல்லற வாழ்வைத் தொடங்குவதற்கு உடலுறவு அனுமதிக்கப்பட்ட விஷயமாகவும் அமைந்துள்ளது. நிச்சயதார்த்தத்தை முடித்து வைக்கின்ற உடலுறவுக்கான வயதின் வரம்பு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தல்மூதுப்படி, “மூன்று வருடங்களும் ஒரு நாளும் ஆகிவிட்ட சிறுமியை உடலுறவின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.” (Mark E. Pietrzyk, http://www.internationalorder.org/scandal_response.html)

 

ஆக, யூத மதத்தில் மூன்று வயது நிரம்பிய பெண் குழந்தையிடம் உடலுறவு வைத்துக்கொள்வது விநோதமான விஷயமல்ல. இந்நிலையில் அவர்கள் எப்படி ஒன்பது வயதான பெண்ணை நபி முஹம்மது (ஸல்) திருமணம் செய்துகொண்டதை விமர்சிக்கிறார்கள்?

 

இந்து மதத்தில் திருமண வயது

இந்து மதத்தில் மனுஸ்மிருதி எனும் மதச்சட்ட சாசனம் இருக்கிறது. அதில் நாம் வாசிக்கிறோம்: ஒரு பெண்ணை அவள் பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்துகொடுத்துவிட வேண்டும். (கவுதமா 18-21)

 

தமது மகள் ஓடிப்போய்விடுவாள் என்று பயப்படுகிற தந்தை, அவள் பருவமடையும் முன்பே திருமணம் செய்துவைக்கட்டும். பருவமடைந்த பின்பும் தமது மகளை அவர் வீட்டில் வைத்திருந்தால், அவர் பாவத்தில்தான் இருக்கிறார். (வசிஷ்டா 17.70)

 

மகள் ஓடிவிடுவாள் என்றால் தந்தை அவளைத் திருமணம் செய்துவைக்கட்டும். நல்ல பண்புகள் கொண்டவனும் கற்பின் சத்தியத்தை முறிக்காதவனுமான அல்லது நல்ல பண்புகளில் குறையுள்ளவனுக்கும் கூட அவர் திருமணம் செய்துவைக்கட்டும். அவள் பருவமடைந்த பின்பும் தமது வீட்டில் அவர் வைத்திருக்க வேண்டாம். (போதயனா 4.1.11) (Manu IX, 88;      http://www.payer.de/dharmashastra/dharmash083.htm)

 

மதம் மற்றும் ஒழுக்கங்கள் பற்றிய களஞ்சியம்(Encyclopedia of Religion and Ethics) கூறுகிறது: தமது மகள் பருவமடைந்த பின்பும் அவளை வீட்டில் வைத்துக்கொண்டு திருமணம் செய்துவைக்காமல் இருப்பது ஓர் இந்து தந்தைக்குப் பாவமாகும். இதனால் அப்பெண் ஒரு சூத்திரனை (தாழ்ந்த சாதிக்காரனை) கைப்பிடித்துச் சென்றுவிடுவாள் என்ற நிலை உணரப்படுகிறது. அத்தகைய திருமணம் செய்து கணவரைப் பெறுவது இழிவானதாகக் கருதப்படும். மனுவின் ஸ்மிருதியில் கணவரின் வயது முப்பது அல்லது இருபத்து நான்காகவும், மனைவியின் வயது பன்னிரண்டு அல்லது எட்டாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் எழுதப்பட்ட பிரகஸ்பதியிலும் மகாபாரதத்தின் ஒரு போதனைப் பகுதியிலும் மனைவியின் வயது பத்து மற்றும் ஏழாக எழுதப்பட்டுள்ளது. பின்னர் அதையே இன்னும் குறைத்து நான்கு முதல் ஆறு என்றும் எட்டு என்றும் உச்சபட்ச வரம்பு நிர்ணயமானது. இவற்றுக்கு அபரிமிதமான ஆதாரங்கள் உண்டு.. (Encyclopedia of Religion and Ethics, p.450,

 

இஸ்லாம் கூறும் திருமண வயது

இஸ்லாம் திருமண வயதைப் பருவமடைவதில் முடிவுசெய்கிறது. காரணம், இதுவே குழந்தைத்தனத்திற்கும் வயதுவந்த நிலைக்கும் இடையில் இயற்கையான வித்தியாசத்தைக் காட்டுகிறது. மாதவிடாய் ஒரு பெண்ணை அவள் குழந்தை பெற்றெடுக்கும் தகுதியுடையவளாகக் காட்டுகிறது. இதற்குரிய வயது நாட்டுக்கு நாடு மாறுபாடும். இதை வெளிப்படையாக உணர முடிகிறது. யாரும் தீர்ப்பளிக்கிற விஷயம் அல்ல.

 

இஸ்லாமியச் சட்டம் முன்கூட்டிய ஒப்பந்தத்தின் மூலம் சில வருடங்கள் முன்பே திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், திருமணப் பேச்சுவார்த்தை நடந்து ஒப்பந்தம் செய்யப்படும். ஆனால் அதைச் செயல்படுத்துவது பிற்காலத்தில்தான் என்று முடிவாகியிருக்கும். ஆக, திருமண ஒப்பந்தம் எழுதப்பட்ட பிறகும் பெண்ணை அவளது கணவரிடம் ஒப்படைக்கமாட்டார்கள். அதற்குப் பல வருடங்களும் ஆகலாம். அதாவது, ஒரு தந்தை தனது முதிர்ச்சியற்ற மகளை ஒரு மனிதருக்கு மணமுடித்துக் கொடுப்பார். ஆனால் அப்பெண் பருவமடைந்த பின்பே கணவரிடம் இல்லறத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்.

 

இஸ்லாமியச் சட்டப்படி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்குச் சில நிபந்தனைகள் (ஷரூத் அந்நிஃபாள்) உண்டு. திருமணத்திற்குப் பிந்திய இல்லற வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இரண்டு சாராருக்கும் போதுமான முதிர்ச்சி இருப்பது அவசியம். இந்நிபந்தனை நிறைவேறவில்லை எனில் திருமணம் தொடர்ந்து பேச்சுரீதியான ஒப்பந்தத்தில் மட்டும் இருக்கும். நடைமுறையில் இருக்காது. அதாவது, பெண் முதிர்ச்சி அடையும் வரை இல்லற வாழ்க்கை தாமதப்படுத்தப்படும்.

 

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமண ஒப்பந்தம் நடந்தபோது ஆயிஷா பக்குவப்படாத, முதிர்ச்சியற்றவராக இருந்தார். எனவே அவர் பருவமடைந்த பின்பே திருமண வாழ்க்கை தொடங்கியது. அதனால்தான் அவர் அதுவரை தம் தந்தை வீட்டிலே மூன்று வருடங்கள் தங்கியிருந்தார்.    

 

யூத, கிறித்துவச் சட்டங்கள் போல இஸ்லாமியச் சட்டத்திலும் தம்பதியர் தாம்பத்ய வாழ்க்கையைத் தொடங்கியவுடனே திருமணம் இறுதிநிலைக்கு வந்துவிடுகிறது. (அதற்கு முன்பு வரை அது ஒப்பந்தமாக மட்டுமே இருக்கும்.) சில முஸ்லிம்கள் திருமணத்திற்கான வயது ஒன்பது அல்லது முதல் மாதவிடாய் வந்த பிறகு என்று நினைக்கிறார்கள். இஸ்லாமியச் சட்டப்படி இது தவறான அபிப்ராயமாகும். உண்மையில் இஸ்லாம் திருமணத்திற்கு என்று குறைந்தபட்ச வயது எதையும் நிர்ணயிக்கவில்லை.

 

இதில் மிக எளிய விதி ஒன்றைத்தான் இஸ்லாமியச் சட்டம் கடைப்பிடிக்கிறது. அது:

ஒரு மனிதர் தமது மனைவி உடலுறவுக்குத் தகுதியானவளாக ஆகியிருக்கும் நிலையில், அது அவளுக்கு எந்தத் தீங்கையும் கொண்டு வராது என்றால், அவர் அவளிடம் எப்போது வேண்டுமானாலும் எந்த முறையிலும் சேரலாம்.

 

இது மிகவும் அழகான, எல்லாச் சட்டங்களையும் உள்ளடக்கிய விதியாகும். இதனை இஸ்லாமிய அறிஞர்கள் ஏகோபித்து ஏற்றுள்ளார்கள்.

 

யூத, கிறித்துவ வேதங்கள் ஓர் ஆய்வு

தம்மூது (யூத வேதம்) கூறுகிறது: ஒருவர் தம் மகள் பருவமடைந்தவுடன் விரைவில் மணமுடித்துத் தந்துவிடட்டும். அது ஒருவரின் அடிமைக்குத் திருமணம் செய்துகொடுப்பதாகவும் அமையலாம். (தல்மூது, பெசகிம் 113)

 

பைபிள் காலங்களில் பருவமடைந்தவுடனே அல்லது அதற்கு முன்பே திருமணம் செய்யப்பட்டதை முன்பே கண்டோம்.

மேரியை ஜோசஃபுக்குத் திருமணம் செய்ததை கத்தோலிக்க களஞ்சியம் கூறுகிறது: ஜோசஃப் தமது நாற்பதாம் வயதில் மெல்கா அல்லது எஸ்கா (சிலரின் கூற்றுப்படி), அல்லது சலோம் என்கிற பெண்ணைத் திருமணம் செய்தார். அவர்கள் நாற்பத்து ஒன்பது வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து ஆறு குழந்தைகளைப் பெற்றனர். மகள்கள் இரண்டு பேர். மகன்கள் நான்கு பேர். இவர்களில் மிகவும் இளையவர் ஜேம்ஸ் ஆவார். ஜோசஃபின் மனைவி இறந்த ஒரு வருடத்திற்குப் பின்பு யூத மதகுருமார் யூத வமிசத்தில் மிகவும் போற்றத்தக்க மேரியைத் திருமணம் செய்ய நாடினர். அப்போது மேரிக்கு பன்னிரண்டு முதல் பதினான்கு வயதுக்குள் இருக்கும். ஜோசஃபுக்கோ தொண்ணூறு வயது. அவர்கள் ஜெருசலத்திற்குப் போனார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் இயேசுவின் பிறப்பு குறித்த அறிவிப்பு ஜோசஃபுக்கு வெளிப்படுத்தப்பட்டு அற்புதம் நிகழ்ந்தது.(http://www.newadvent.org/cathen/08504a.htm)

 

சிந்திக்க வேண்டியவை

இந்த எல்லாக் குறிப்புகளும் குற்றச்சாட்டுக்குத் தக்க பதில்களாக உள்ளன.

 

 1.  நபியவர்களின் திருமணம் குறித்து எந்த எதிரியும் அவர்களது காலத்தில் விமர்சிக்காதது ஏன்? அத்திருமணம் தவறு என்றிருந்தால் நிச்சயம் அவர்கள் இதைக் குறித்து பேசாமல் விட்டிருப்பார்களா? ஆனால் ஒரு முறை கூட அவர்கள் இதைக் குறித்து எதிர்மறையாகப் பேசியதில்லை.
   
 2. ஆயிஷா (ரலி) அவர்களின் காலத்துப் பெண்கள் ஆயிஷாவுக்கு அமைந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தது ஏன்? அத்திருமணம் சரியல்ல என்றிருந்தால் அக்காலத்துப் பெண்கள் ஆயிஷாவின் நிலை எண்ணி வருத்தப்பட்டிருப்பார்கள். மகிழ்ந்திருக்கமாட்டார்கள். இதிலிருந்தே அத்திருமணத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாகிறது.
   
 3. ஆயிஷாவுக்கு அத்திருமணத்தில் அதிருப்தி இருந்ததாக ஒரே ஒரு செய்தி கூட அவர் மூலமாக இல்லையே ஏன்? அவர் பாதிக்கப்பட்டவராக இருந்திருந்தால் ஒரு தகவலாவது அவரின் வழியாகப் பதிவாகியிருக்குமே? அவரிடமாவது அப்படிப்பட்ட எந்த அடையாளமேனும் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லையே? அவரோ இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான அறிஞராக, தலைவியாக ஆகியுள்ளார். ஆண்களுக்குக் கூட இஸ்லாமைப் போதித்திருக்கிறார். திருமணத்தால் பாதிக்கப்பட்டவரின் நிலை இப்படித்தான் இருக்குமா?
   
 4. ஆயிஷா ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்திருந்தால், ஏன் நபி முஹம்மதை அவ்வளவு நேசித்திருக்கிறார்? அவரின் நேசத்தில் ரோஷம் கொள்கிற அளவு நேசித்திருக்கிறார் என்றால் அது ஏன்? இதுதான் ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையா?

 

முடிவுரை

குழந்தை மணத்தைச் சில நாடுகள் 16 வயதில் சட்டப்படி செல்லுபடியாக்கியுள்ளது. இன்னும் சில நாடுகளில் அதற்கு முன்பேயும் செல்லுபடியாக உள்ளது. ஆக, ஒரு நாட்டில் நீங்கள் குழந்தை மணம் செய்து சித்திரவதை செய்பவராகவும், மற்றொரு நாட்டில் அப்படிப்பட்டவர் அல்ல என்றும் முடிவு செய்யப்படும். இது சரியா? எதைக்கொண்டு எது சரி என்று முடிவு செய்வது? முஹம்மது நபியவர்கள் 1400 வருடங்களுக்கு முந்திய சமுதாயம் ஒன்றில் வாழ்ந்தார்கள். நமது இன்றைய காலத்தையும் அளவுகோல்களையும் கொண்டு அவர்களின் செயல்பாடு குறித்து தீர்ப்பளிக்க கூடாது. அந்தத் தீர்ப்பு தவறாகவும் அறிவற்றதாகவும் ஆகிவிடும்.

ஓர் ஒழுக்கவிதியை கவனத்தில்கொள்ள வேண்டும். ஒரு திருமணத்திலும் உடற்சேர்க்கையிலும் தீங்கு இருக்குமெனில், அச்சமயம் ஒருவர் அக்காரியத்தில் இறங்கக் கூடாது. ஆனால் எந்தத் தீங்கும் இல்லையெனில் ஒருவர் தமது விருப்பப்படியும் தேர்வுப்படியும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வது தவறல்ல.

நீங்கள், “எப்படி அத்திருமணத்தைச் சரியென்று தெரிந்துகொள்வது?” என்று கேட்கலாம். அதைப் பொறுத்தவரை வெளிப்படையான அடையாளங்களைக் கண்டுவிடுவோம். உடலும் மனமும் முதிர்ச்சி அடைந்த நிலையைப் பார்ப்போம். அவர்களுக்குள் அதில் பொருத்தம் இருக்கும் எனில், அவர்கள் அந்த உறவைத் தொடர்வதில் அவர்களுக்கு உரிமை உண்டு.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மனிதகுலம் அனைத்துக்கும், எல்லாவிதக் கலாசார மக்களுக்கும் மிக மகத்தான உதாரணமாவார்கள். அவர்கள் ஓர் இறைத்தூதர். மகத்தான இறைத்தூதராக இருந்தது மட்டுமின்றி, ஓர் ஆட்சித்தலைவராக, ஆசிரியராக, இராணுவத் தளபதியாக, அண்டை வீட்டாராக, தோழராக வாழ்ந்து சென்றார்கள். குடும்ப வாழ்க்கை என்பது இவற்றில் மிகவும் முக்கியமான அம்சமாகும். நபியவர்கள் இதிலும் மகத்தான முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். ஒரு கணவராகவும், தந்தையாகவும் வாழ்ந்து காட்டினார்கள். மேற்கத்திய உலகில் எத்தனையோ குடும்பங்கள் சிதைந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்குரிய தீர்வுகளை நபியவர்களின் வாழ்க்கையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

அல்லாஹ் கூறுகிறான்:‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்று நபியே கூறுவீராக. (அல்குர்ஆன் 17.81)

 

ஆதாரக்குறிப்புகள்

1. http://www.answering-christianity.com/aisha.htm

2. http://www.answering-christianity.com/sami_zaatri/aisha_and_prophet_Muhammad .htm

3. http://www.answering-christianity.com/childbrides_rebuttal.htm

4. http://muslim-responses.com/Marriage_with_Aisha/Marriage_with_Aisha_

5. http://www.islamic-awareness.org/Polemics/aishah.html

6. http://www.iol.ie/~afifi/BICNews/Sabeel/sabeel6.htm

7. http://www.call-to-monotheism.com/why_did_prophet_muhammed_marry_aisha_at_a_young_age__is_that_morally_right__what_about_paedophilia___by_dan_1988

8. http://forums.almaghrib.org/showthread.php?t=64727

9. http://www.letmeturnthetables.com/2008/07/why-prophet-muhammad-married-aisha-when.html

10. http://www.ummaland.com/blog/927/defending-the-marriage-of-our-beloved-prophet-muhammad-s-a-w-s-with-our-bel/

11. http://www.ebnmaryam.com/vb/t196253-3.html

2928 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க