ஸகாத் ஓர் இஸ்லாமியக் கடமை


ஸகாத்என்பதுகட்டாயமானதர்மம்ஆகும். இஸ்லாம்குறிப்பிட்டஅளவில்செல்வம்வைத்துள்ளஒவ்வொருமுஸ்லிம்மீதும்இதுகடமையாகஉள்ளது. இவ்வகைதர்மம்ஒருவணக்கமும்கூட. இஸ்லாமியமார்க்கத்தின்ஐந்துஅடிப்படைத்தூண்களில்இதுவும்ஒன்று. ஷஹாதாஎனும்உறுதிமொழிகூறல், தொழுகை, நோன்பு, ஹஜ்ஜுஎன்பவைமற்றதூண்களாகும். இஸ்லாமியசமுதாயத்தில்ஸகாத்என்பதுமிகமுக்கியமானபொருளாதாரக்கருவியாகஉள்ளது. இதனைக்குர்ஆன்பலவசனங்களில்குறிப்பிடுவதுடன், ஆதாரப்பூர்வமானநபிமொழிகளும்இதைக்குறித்துகூறுகின்றது.

 

பொருளடக்கம்

 

மொழிரீதியான அர்த்தம்

மொழிரீதியாக ஸகாத் என்றால் தூய்மைப்படுத்துதல் என்று அர்த்தம். ஒரு முஸ்லிமின் செல்வத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதை இது குறிக்கும். செல்வத்தை இதன் மூலம் தூய்மைப்படுத்துவதின் மூலம் அதன் வளர்ச்சி அதிகரிக்கும். அது நீதியாகப் பங்கிடப்படும். உள்ளத்தின் தூய்மை என்பது பொறாமை, சுயநலம், கஞ்சத்தனம், உலக ஆசை ஆகியவற்றிலிருந்து உள்ளத்தைப் பாதுகாப்பதாகும். மொத்தத்தில் பாவத்திலிருந்து தூய்மை அடைவதே நோக்கமாகும்.

 

இஸ்லாமிய வழக்கில் ஸகாத் என்பது ஒரு முஸ்லிமின் செல்வம் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிவிட்டால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்து தர்மம் செய்வதாகும். அதை முஸ்லிம்களில் குறிப்பிட்ட சாராருக்கு வழங்க வேண்டும். சமுதாயத்தின் நன்மையை நோக்கமாகக்கொள்வதாகும். இது ஆண்டுக்கு ஒரு முறை சந்திரச் சுழற்சிப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும்.

 

ஒரு முஸ்லிம் தமது தேவை மற்றும் தமது குடும்பத்தின் தேவை, செலுத்தப்பட வேண்டிய கடன்கள், செலவுகள் ஆகியவை போக மீதமாகத் தன் கைவசம் செல்வம் வைத்திருந்தால் அதற்கு ஸகாத் கொடுப்பது கடமையாகும். ஹிஜ்ரீ ஆண்டுப்படி கணக்கிட்டு ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் இது கடமையாகிறது. ஒருவரிடம் 85 கிராம்கள் அளவுக்குத் தங்கமோ, அதற்கு நிகரான பணமோ, 595 கிராம்கள் அளவு வெள்ளியோ வைத்திருந்தால், அவர் ஸகாத் கொடுக்க வேண்டும். அவர் வைத்திருப்பதிலிருந்து 2.5 சதவீதத்தை அவர் கொடுக்க வேண்டும். 

 

ஸகாத்தின் நோக்கங்கள்

ஸகாத்திற்கு மிக ஆழமான மனிதநேயக் கண்ணோட்டமும் சமூகப் பொருளாதார மதிப்பும் இருக்கிறது. இந்த மதக்கடமை செல்வம் ஓரிடத்தில் தேங்குவதைத் தடுப்பதுடன்,முஸ்லிம் சமுதாயத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஏழைகளுக்குச் செல்வம் பகிரப்படுகிறது. தவிர, ஸகாத் ஒருவரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி இறைவனின் அருட்கொடைகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற பண்பை முஸ்லிம்களிடம் ஊக்குவிக்கிறது.

 

குர்ஆன்

முஸ்லிம்களில் செல்வம் உள்ளவர்கள் தங்கள் செல்வத்தை அல்லாஹ்வின் பார்வையில் தூய்மைப்படுத்திக்கொள்ள தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் நமக்குச் செல்வத்தை வழங்கி அருள்புரிந்துள்ளான். அதிலிருந்து ஒரு பகுதியைத் தேவை உள்ளவர்களுக்கு வழங்கினால் அது நம் செல்வத்தைத் தூய்மைப்படுத்தும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கின்ற) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை நீர் எடுப்பீராக! அதனால் அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களு(டைய நற்பாக்கியத்து)க்காக பிரார்த்தனை செய்வீராக!(அல்குர்ஆன்9.103)

 

மார்க்கச் சட்டம்

ஸகாத் குறித்த மார்க்கத்தின் சட்டத்தைப் பின்வரும் இறைவசனத்திலிருந்து எடுக்கிறோம்: தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றார்களே அவர்களுக்கு(நபியே!) நீர் துன்புறுத்தக்கூடிய வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக!(அல்குர்ஆன் 9.34)

 

ஸகாத்ஒருவர்மீதுகடமையாகவேண்டுமெனில்அவருடையசெல்வம்நிஸாபைஎட்டியிருக்கவேண்டும். நிஸாப்என்பதுஸகாத்கடமையாவதற்கானகுறைந்தபட்சஅளவாகும்.

 

ஸகாத்கடமையாவதற்கானநிபந்தனைகள்

ஸகாத்கடமையாவதற்குஇரண்டுவிசயங்கள்அவசியமாகும். ஒன்று, செல்வத்தின்அளவு. இன்னொன்று, இஸ்லாம்நிர்ணயித்துள்ளகாலஅளவு. ஒவ்வொருமுஸ்லிமும்அவரிடம்இஸ்லாம்நிர்ணயித்துள்ளஅளவுக்குக்குறைந்தபட்சசெல்வம்இருந்தால், அதாவதுநிஸாபைஎட்டியிருந்தால், அதனுடன்மற்றநிபந்தனைகளும்பூர்த்தியானால்ஸகாத்கடமையாகிவிடும்.

 

பொதுவாகஸகாத்கடமையாகும்செல்வங்கள்

தங்கத்திற்குரியநிஸாப்இருபதுமிஸ்கால்கள்அல்லது85 கிராம்கள். வெள்ளிக்குரியநிஸாப்நூற்றிஇருபதுமிஸ்கால்கள்அல்லது535 கிராம்கள். இந்தஅளவைக்காட்டிலும்ஒருவரிடம்தங்கமோ, வெள்ளியோஇருந்தால், அதற்குஸகாத்கடமையாகாது.

 

தங்கம்

தங்கத்திற்கு85 கிராம்கள்அளவைஅதுஎட்டியிருக்கவேண்டும். அப்போதுஇந்தஅளவோஅல்லதுஇதற்குமேலோஎவ்வளவுஇருந்தாலும்அதுகைவசம்வந்ததிலிருந்துஒருவருடம்பூர்த்தியானபின்அதிலிருந்து2.5 சதவீதத்தைஸகாத்தாகக்கொடுக்கவேண்டும்.

 

வெள்ளி

வெள்ளிக்கு595 கிராம்கள்அளவைஅதுஎட்டியிருக்கவேண்டும். அப்போதுஇந்தஅளவோஅல்லதுஇதற்குமேலோஎவ்வளவுஇருந்தாலும்அதுகைவசம்வந்ததிலிருந்துஒருவருடம்பூர்த்தியானபின்அதிலிருந்து2.5 சதவீதத்தைஸகாத்தாகக்கொடுக்கவேண்டும்.

 

கையிருப்பில்உள்ளபணம்

தங்கம் அல்லது வெள்ளியின் குறைந்தபட்ச அளவுக்கான மதிப்பை கையிருப்பில் உள்ள பணம் எட்டிவிட்டால், அது கைவசம் வந்ததிலிருந்து ஒரு வருடம் பூர்த்தியான பின், அதிலிருந்து 2.5 சதவீதத்தை ஸகாத்தாக கொடுக்க வேண்டும்.

 

சொத்துகளின்வகைகள்

தங்கம், வெள்ளிஅல்லாதமற்றசெல்வங்களில்எந்தச்செல்வங்களுக்குஸகாத்கடமையாகும்என்பதைஇங்குஅறிந்துகொள்ளவேண்டும்.

  • பெண்கள்அணிகின்றதங்கம், வெள்ளிநகைகள்
  • கால்நடைகள்: ஆடு, மாடு, ஒட்டகம்
  • உணவுதானியங்கள், பழங்கள்இன்னும்மற்றவை

 

ஸகாத்வாங்கத்தகுதியுடையோர்

ஸகாத்தைஎட்டுவகையானவர்களுக்குமட்டுமேவழங்கவேண்டும்என்றுகுர்ஆன்குறிப்பிடுகிறது:

தர்மமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தர்மத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். இது அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன்9.60)

 

இவ்வசனத்தில் தர்மம்(ஸதகா) என்று குறிப்பிடப்படுவது கடமையான ஸகாத்தே ஆகும்.

  • ஃபுகரா (வறியவர்கள்)-- இவர்களுக்குச் சில உடைமைகள் இருக்கும்.
  • மசாகீன் (யாசகர்கள்)-- இவர்களுக்கு எதுவும் சொந்தமாக இருக்காது.
  • ஸகாத் வசூலிப்பவர்கள்-- ஸகாத்தை வசூலிப்பதற்காகவும் அதை விநியோகம் செய்வதற்காகவும் பணிபுரிபவர்கள்.
  • இஸ்லாமைத் தழுவியவர்கள்-- இவர்கள் முஸ்லிமானதால் ஆதரவின்றி இருப்பார்கள்.
  • அடிமைகள்-- இவர்களை விடுதலை செய்வதற்கு வழங்கலாம்.
  • கடன்பட்டவர்கள்-- கடனை அடைக்க வழங்கலாம்.
  • அல்லாஹ்வின் பாதையில் போர்புரிபவர்கள் மற்றும் இஸ்லாமைப் பரப்ப உழைப்பவர்கள்.
  • வழிப்போக்கர்கள்-- பயணத்தின்போது கஷ்டத்தில் சிக்கியவர்கள்.

 

ஸகாத்வழங்காதவர்களுக்குத்தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்' என்று சொல்லும் எனக் கூறிவிட்டு, பிறகு, "அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன்'' எனும் (3:180ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.(புகாரீ1403)

 

இறைத்தூதர்கள் மீதும் ஸகாத் கடமை

ஸகாத்தின் வரலாறு என்பது தொழுகையின் வரலாறு போன்றதே என்று குர்ஆனின் மூலம் அறிந்துகொள்கிறோம். தொழுகை எல்லாத் தூதர்கள் மீதும் கடமையாக இருந்தது போல் ஸகாத்தும் கடமையாக இருந்துள்ளது. அல்லாஹ் முஸ்லிம்களை நோக்கி ஸகாத் வழங்குங்கள் என்று கூறியபோது அதை நன்கு அறிந்தே இருந்தனர் முஸ்லிம்கள். ஏனெனில், இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றிய அனைவரும் ஸகாத் குறித்து தெரிந்து வைத்திருந்தார்கள். எனவேதான் குர்ஆன் இதை, ‘நிர்ணயிக்கப்பட்ட கடமை’ என்று கூறியுள்ளது. (அல்குர்ஆன் 70.24)

 

ஆகவேஇந்த வழிமுறை நபியவர்களுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்கள் குடும்பத்தார் தொழுது, ஸகாத் வழங்கிவர வேண்டும் என்று வழிநடத்தியதாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. “அவர் தொழுகையைத் தவறாது கடைப்பிடிக்கும்படியும், ‘ஸகாத்’தும் கொடுத்து வரும்படியும் தம் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார்” என்று (19.55) அல்லாஹ் கூறுகிறான். மேலும் இஸ்ரவேலர்களுக்கு அளித்த வாக்கு பற்றி கூறுமிடத்தில், “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையைத் தவறாது கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்துவாருங்கள்” என்று(5.12) கூறியதாகக் குறிப்பிடுகிறான்.

 

இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததி குறித்து கூறும்போது, “மேலும், நன்மையான செயல்களைச் செய்யும்படியும், தொழுகையைத் தவறாது கடைப்பிடிக்கும்படியும், ஸகாத்கொடுத்து வரும்படியாகவும் அவர்களுக்குவஹ்யிமூலம் அறிவித்தோம்” (21.73) என்று குறிப்பிடுகிறான். நபி ஈசா (அலை) அவர்கள் தம்மைப் பற்றி கூறியதாகக் கூறும் இடத்தில், “நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்கியுள்ளான். நான் வாழ்கிற வரை தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஸகாத் கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு அறிவுரை கூறியுள்ளான்” (19.31) என்று கூறியதாகக் குறிப்பிடுகிறான்.

 

வல்லவனான அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைக் காணுங்கள்: வேதமுடையவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் (ஆகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டார்கள்.எனினும், அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைத் தூய்மைப்படுத்தியவர்களாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதிமிக்கவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு கட்டளை அவர்களுக்கு இடப்படவில்லை. மேலும், அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வரும்படியே (தவிர வேறெதுவும் அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.(அல்குர்ஆன் 98.4,5)

 

நபிமொழி

உலகில் எத்தனையோ வகை மோகங்கள் உண்டு. அவற்றில் மிகவும் அபாயமானதும் சக்தி வாய்ந்ததும் செல்வத்தின் மீதுள்ள மோகம்தான். ஆகவே நபியவர்கள் இந்த மோகத்தை எல்லாத் தீமைகளுக்கும் காரணமான ஒன்றாக முஸ்லிம்களுக்குக் கூறியுள்ளார்கள். “எனது சமுதாயம் செல்வத்தால் சோதிக்கப்படும்” என்றார்கள். (ஜாமிவுத் திர்மிதீ 481) ஒரு முஸ்லிம் செல்வத்தின் வஞ்சகக் கவர்ச்சியில் மயங்கிவிடாமல் இருந்தாலே அவர் எத்தனையோ குற்றங்களை விட்டுப் பாதுகாக்கப்பட்டுவிடுவார்.  

 

ஸகாத்தின் நோக்கங்களில் அடுத்ததாக உள்ளது எதுவெனில், ஏழை முஸ்லிம்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாகும். “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான். அது உங்களில் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுவதாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) இது ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏழைகளுக்குரிய பங்கான ஸகாத்தை வழங்காத வரை ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை மாறப்போவதில்லை என்பதே அது. அப்படிக் கொடுத்தால்தான் இஸ்லாம் நடைமுறையளவில் பூர்த்தியாகும்.

 

ஸகாத் யார் யார் மீது கடமை?

ஸகாத் என்பது ஹிஜ்ரீ கணக்குப்படி ஓர் ஆண்டு நிறைவான நிலையில் இஸ்லாம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அளவு (நிசாப்) செல்வத்தை(யோ அல்லது அதற்கும் அதிகமாகவோ) வைத்துள்ள ஒருவர் அதிலிருந்து இரண்டரை சதவீதத்தைத் தர்மமாகக் கொடுத்துவிடுவதாகும்.

 

தர்மத்தின் வகைகள்

தர்மங்கள் பொதுவாக இரண்டு வகை. ஒன்று, கடமையான தர்மம். இன்னொன்று, உபரியான தர்மம். கடமையான தர்மத்தை ஸகாத் எனப்படுகிறது. உபரியாகத் தரப்படுவதை ஸதகா எனப்படுகிறது. ஸகாத் என்பது ஸகா எனும் சொல்லிலிருந்து வருகிறது. இதன் பொருள் செழித்து வளர்தல், தூய்மைப்படுத்தல் என்பதாகும். ஒருவர் தம்மிடம் மிகுதியாக உள்ள செல்வத்திலிருந்து ஒரு பகுதியைத் தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதால் அவருடைய செல்வம் தூய்மை பெறுகிறது. அல்லது அதை அவர் சட்டத்திற்குட்பட்டு பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெறுகிறார்.

 

குர்ஆனும் நபிமொழிகளும் ஸகாத்தை மட்டுமின்றி ஸதகாவையும் வலியுறுத்திப் பேசுகின்றன. தேவையுள்ளவர்களுக்குத் தர்மம் செய்வதே அது.

 

ஸகாத்தின் நன்மைகள்

இஸ்லாம் கட்டளையிட்டுள்ள இந்த நடைமுறை ஏராளமான நன்மைகளைக் கொண்டு வருகிறது. அவை:

  1. சமுதாயத்தில் ஏழைகளின் தேவை பூர்த்தியாகிறது.
     
  2. ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு மத்தியில் நல்லுறவை வளர்க்கிறது. பொதுவாகவே யாரும் தங்களுக்கு உதவியர்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வார்கள்.
     
  3. ஒருவரின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துகிறது. கஞ்சத்தனம், தற்பெருமை ஆகிய தீய பண்புகளிலிருந்து காக்கிறது.
     
  4. தேவையுள்ள மனிதர்களிடம் பெருந்தன்மையாகவும் வள்ளல் பண்புடனும் இரக்கச்சிந்தனையுடனும் நடந்துகொள்கிற மனப்போக்கை உருவாக்குகிறது.
     
  5. அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தருகிறது. அதன் காரணமாக செல்வத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது. செலவழிக்கப்பட்டது பன்மடங்காகத் திரும்பக் கிடைக்கிறது. “ஆகவே, நீங்கள் எதை தர்மம் செய்தபோதிலும் அல்லாஹ்அதற்குப் பகரமானதைக் கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்” (34.39) என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

 

ஆதாரங்கள்

[a] http://www.tamilislam.com/english/basic/Zakath_sadaqah.htm

[1] http://islamqa.info/en/ref/50801

[2] http://www.missionislam.com/knowledge/zakat.htm, http://quran.com/9/60

[3] http://quran.com

[4] http://www.islamhouse.com/p/316361

[5] http://www.sunnah.com

[6] http://www.islamicity.com/mosque/zakat/

[7] http://forums.islamicawakening.com/f20/what-is-the-difference-between-sadaqa-zakat-47629/

[8] http://www.islamhouse.com/p/316361

2773 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க